For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்சிகளை இணைத்துக்கொள்ளலாம் என தூதுவிட்டது தினகரன்தான்.. ஆதாரம் உள்ளது.. தங்கமணி தடாலடி!

கட்சிகளை இணைத்துக்கொள்ளலாம் என தூதுவிட்டவர் தினகரன்தான் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கட்சிகளை இணைக்க தூதுவிட்டது தினகரன்தான் - தங்கமணி- வீடியோ

    நாமக்கல்: கட்சிகளை இணைத்துக்கொள்ளலாம் என தூதுவிட்டவர் தினகரன்தான் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியில் இருந்து இறக்க அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சந்தித்தார் என்றார். மேலும் கடந்த வாரம் கூட தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டார் என்று கூறி குண்டை தூக்கி போட்டார்.

    தங்க தமிழ்ச்செல்வனின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அமமுக கட்சியினரும் அதிமுகவினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

    தினகரன் தூதுவிட்டார்

    தினகரன் தூதுவிட்டார்

    இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வனின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் தங்கமணி பதிலடி கொடுத்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி பேசியதாவது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிமுகவுடன் அமமுகவை இணைத்து கொள்ளலாம் என தினகரன் தூது விட்டார்.

    ஆதாரம் உள்ளது

    ஆதாரம் உள்ளது

    முதல்வர் பதவியில் நீங்களே இருந்து கொள்ளலாம் எனவும் கூறினார். இதற்கான ஆதாரம் உள்ளது. நேரம் வரும் போது அதனை வெளியிடுவேன்.

     பொய் பிரச்சாரம்

    பொய் பிரச்சாரம்

    அதிமுக ஏற்று கொள்ளாததால், தங்கதமிழ்செல்வன் விரக்தியில் உளறி வருகிறார். அவர்களின் கோரிக்கையை ஏற்காததால், பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

    எப்படி சந்திப்பார்?

    எப்படி சந்திப்பார்?

    ஒற்றுமையாக உள்ள முதல்வர், துணை முதல்வரை பிரிக்க சூழ்ச்சி மேற்கொண்டனர். சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் எப்படி தினகரனை சந்திப்பார்? இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

    English summary
    Minister Thangamani reacts to Thanga tamilselvan accusastion on OPS. Dinakaran only asked us to join two parties he said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X