For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைகளுக்கு குளிப்பாட்டி விட்டு ஓட்டு வேட்டையாடும் அமைச்சர் வளர்மதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவும் அமைச்சருமான வளர்மதி, தொகுதியை தக்க வைக்க தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தொகுதி குழந்தைகளுக்கு குளிப்பாட்டி விட்டும், குழாயில் தண்ணீர் அடித்துக்கொடுத்தும் ஓட்டு வேட்டையாடி வருகிறார்.

சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் பா. வளர்மதி. அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் கு.க.செல்வமும், மக்கள் நலக்கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் ரெட்சன் அம்பிகாபதியும் களமிறங்கியுள்ளனர்.

என்னதான் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்தாலும் பா.வளர்மதிக்கு தொகுதியின் மொத்தமுள்ள 12 வட்டங்களில், 107, 108, 109, 110,112 மற்றும் 113 ஆகிய வட்டங்களில் சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு அதிகமாக இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாம்.

தனக்கு எதிராக பணபலம் மிக்க வேட்பாளர்களான கு.க.செல்வமும், ரெட்சன் அம்பிகாபதியும் களத்தில் உள்ளதால் சற்றே உதறலுடன்தான் வாக்கு சேகரித்து வருகிறாராம் அமைச்சர் வளர்மதி.

வீதி வீதியா ஒட்டு வேட்டை

வீதி வீதியா ஒட்டு வேட்டை

அதிமுக அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளை எடுத்துக்கூறி ஓட்டு வேட்டையாடும் வளர்மதி, தொகுதியில் வீதி வீதியாக சென்று நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை வாக்காளர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.

இரட்டை இலை கோலம்

இரட்டை இலை கோலம்

வளர்மதிக்கு வரவேற்பு உள்ள ஏரியாக்களில் வீட்டின் முன்பு பெண்கள் இரட்டை இலை கோலம் போட்டு வரவேற்கிறார்கள். ஆரத்தி எடுத்து பொட்டு வைக்கிறார்கள். அவர்களுக்கு தனி கவனிப்பு உண்டு.

நல்லா குளிங்க ராசா

நல்லா குளிங்க ராசா

சில ஏரியாக்களில் குடிதண்ணீர் அடித்து கொடுக்கும் வளர்மதி, சிறுவர்களை அழைத்து குளிப்பாட்டியும் விடுகிறார். அமைச்சர் அக்கா அக்கா குளிப்பாட்டி விடுறாங்க பாருங்களேன் என்று கூடுகிறது கூட்டம். அப்போது வாக்கு சேகரிக்கிறார் வளர்மதி.

அம்மாதான் வேட்பாளர்

அம்மாதான் வேட்பாளர்

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் அம்மாதான் வேட்பாளர், அவங்க ஜெயிச்சு வந்தா இன்னும் நிறைய செய்வாங்க என்று தனக்கு ஓட்டு கேட்டு போகும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறார் வளர்மதி.

தக்க வைப்பாரா வளர்மதி

தக்க வைப்பாரா வளர்மதி

தொகுதி முழுக்க சுற்றி வந்து வீடு வீடாக ஏறி இறங்கி வாக்கு சேகரித்து வரும் பா. வளர்மதிக்கு இம்முறை ஆயிரம் விளக்குத் தொகுதி மக்கள் வாக்களிப்பார்களா? அவர் தன்னுடைய தொகுதியை தக்க வைத்து மீண்டும் அமைச்சர் பதவியேற்பாரா? மே 19ம் தேதி தெரியும்.

English summary
ADMK candidate Minister Pa. Valarmathi election campaign in Thousand light constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X