For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாறிப் போய்க் கிடக்கும் சென்னை மாநகராட்சியின் “நம்ம டாய்லெட்” திட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் "நம்ம டாய்லெட்" என்ற செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட கழிப்பிடம் நகரம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரூ. 35 கோடி மதிப்பிலான இந்த திட்டம் யாருக்கும் பலனில்லாமல் பாழ்பட்டு கிடக்கிறது. சீரழிந்து கிடக்கிறது.

சென்னை மாநகராட்சியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 904 இலவச கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சுற்றுலாவாசிகளுக்காக:

ஆனால், சுற்றுலாவாசிகள் மற்றும் பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையை சமாளிக்க நம்ம டாய்லெட் என்ற திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டது.

35 கோடி செலவு:

இதற்காக ரூபாய் 35 கோடி மதிப்பில் 348 நம்ம டாய்லெட்டு அமைக்க முடிவு செய்யப்பட்டது. செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட கழிப்பிடம் அமைக்க முடிவானது.

ஒருவர் மட்டுமே:

சென்னை மாநகராட்சி சார்பில் மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள நம்ம டாய்லெட்டில் ஒரு ஆள் மட்டுமே நின்று இயற்கை உபாதையை தணிக்கும் வகையில் உள்ளது.

பாதிக்கதவு பயங்கரம்:

இதில், பாதி கதவு மட்டுமே உள்ளதால் ஆண்கள் மட்டுமே பயன்படுத்தலாம். பெண்கள் பயன்படுத்த முடியாது என்பதால், இந்த திட்டத்தின் முழுபலனும் பொதுமக்களுக்கு கிடைக்காது.

சுகாதார சீர்கேடு:

சுத்தமாக பராமரிக்க வேண்டிய நம்ம டாய்லெட் திட்டத்தின் ஆரம்பமே சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் வகையில் உள்ளது.

செயற்கை இழையால் தயாரிப்பு:

புதிதாக ரூபாய் 35 கோடி செலவில் நம்ம டாய்லெட் என்று 348 கழிப்பிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செயற்கை நாரிழை கொண்டு அமைக்கப்படுவதால் அதிக நாட்கள் நீடித்து வராது, பாதுகாப்பானதும் அல்ல என்கின்றனர்.

தண்ணீ தொட்டி அபேஸ்:

சில நம்ம டாய்லட்டுகளில் மேல்புறம் வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியையே கழற்றி விட்டனர். இதனால், பல ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட நம்ம டாய்லெட்டுகள் இப்போது வெறும் எலும்பு கூடாக எதற்கும் பயன்படாமல் இருக்கிறது.

பயணிகள் அவதி:

கோடை காலத்தில் மெரினா கடற்கரை மற்றும் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் நம்ம டாய்லெட்டை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

English summary
”Namma toilet” Scheme is now in useless condition at Chennai. It is made by 35 crore estimation in Chennai metro city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X