முதல்வர் கொடுத்த லோன் இன்னும் கிடைக்கல.. செக் திரும்ப வாங்கிட்டாங்க- நரிக்குறவப் பெண் அஸ்வினி வேதனை!
செங்கல்பட்டு : பூஞ்சேரியைச் சேர்ந்த நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த பெண் அஸ்வினி, முதல்வர் ஸ்டாலின் தனக்கு வழங்கிய கடன் உதவி இன்னும் தனக்குக் கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடனுதவி கொடுக்கப்பட்டிருந்தும், கடை இல்லை உள்ளிட்ட காரணங்களை கூறி தொடர்ந்து தங்களுக்கு வங்கியில் கடன் வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் அஸ்வினி.
முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு லட்சம் செக் கொடுத்தார். நிகழ்ச்சி முடிந்ததும் செக் அட்டையை திரும்ப வாங்கிக் கொண்டார்கள். வங்கியில் கேட்டால் லோன் தர மறுக்கிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார் நரிக்குறவப் பெண் அஸ்வினி.

நரிக்குறவ பெண் வீடியோ
மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதற்காக கடந்த ஆண்டு பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி மற்றும் அதே சமூதாயத்தை சேர்ந்த மக்கள் சிலர் சென்றனர். ஆனால், அவர்கள் பந்தியில் அமரவிடாமல் கோயில் நிர்வாகத்தினரால் அவமதிக்கப்பட்டனர். இதையடுத்து, மனமுடைந்த நரிக்குறவப் பெண் அஸ்வினி தனக்கு நேர்ந்த கொடுமைகளை இணைய ஊடகம் வாயிலாக தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளத்தில் பரவியது.

அன்னதானம்
நரிக்குறவப் பெண் அஸ்வினி பேசிய வீடியோ முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றது. இதனைத் தொடர்ந்து,மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அந்தப் பெண் அஸ்வினி மற்றும் நரிக்குறவர் சமூகத்தினரை அழைத்து அன்னதானம் வழங்கி, அவர்களுடன் அமர்ந்து அமைச்சரும் அன்னதானம் சாப்பிட்டார்.

பூஞ்சேரிக்கே சென்ற முதல்வர்
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தீபாவளி அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினிக்கும் கடனுதவி ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

அஸ்வினி வீட்டுக்கே சென்ற முதல்வர்
அதைத்தொடர்ந்து பழங்குடி குடியிருப்பில் உள்ள அஸ்வினியின் இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அஸ்வினி வீட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்ப நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அவரது வீட்டில் உணவும் சாப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின். இது சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வேதனை தெரிவித்த அஸ்வினி
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வழங்கிய கடன் உதவி தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என நரிக்குறவப் பெண் அஸ்வினி, ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில், "எங்கள் பகுதிக்கு முதலமைச்சர் ஐயா வந்தார். 12 பேருக்கு தலா ஒரு லட்சம் கொடுத்தார். 30 பேருக்கு 10 ஆயிரம் கொடுத்தார். பட்டா, வீடு என நிறைய ஆணைகள் கொடுத்தார்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை, ஒரு லட்சம் லோன் யாருக்கும் கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது.

லோன் இன்னும் வரவில்லை
கடை இருந்தால் மட்டும் லோன் கொடுப்போம் என வங்கி மேனேஜர் கூறுகிறார். எங்களிடம் எல்லா ஆதாரங்களும் இருந்தும் தர மறுக்கிறார்கள். இது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசனை பார்த்தோம். அவர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை பார்க்கச் சொன்னார். மாவட்ட ஆட்சியர் கடை கொடுக்கச் சொன்னார்கள். விஏஓ வந்து பார்த்துவிட்டு, கடைகள் காலியாக இல்லையென கூறுகிறார்கள். கடைகள் காலியாக இருந்தாலும் தர மறுக்கிறார்கள்.

நம்பிக்கை செத்துப்போச்சு
முதலமைச்சரே உங்கள் வீட்டிற்கு வந்தாரே, நீ ஏன் மறுபடியும் ரோட்டில் ஊசி, பாசி விக்குற என்று நிறைய பேர் கேட்கிறார்கள். ஆனால், கடை வைக்க முதல்வர் ஸ்டாலின் கொடுத்த லோனும் வரவில்லை. வீடு கட்டி தருவதாகச் சொன்னார்கள். அதுவும் இல்லை, பாத்ரூம் கட்ட செங்கல் எல்லாம் கொண்டு வந்துவிட்டு, திரும்பவும் அந்த செங்கற்களை எடுத்துச் சென்று விட்டார்கள். நம்பிக்கை முழுவதுமாக செத்துப்போச்சு" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications