For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடநாட்டில் முளைத்தது புதிய சோதனை சாவடி... வாகன சோதனை தீவிரம்

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை கொள்ளை நடந்ததின் எதிரொலியாக இப்போது, எஸ்டேட்டை சுற்றி புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

கொடநாடு: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை கொள்ளை நடந்தது முதல் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தப்பகுதியில், புதியதாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அதனால் கொடநாடு காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

 A New Check Post opened in Kodanad Estate,security has tightened

நேற்று மாலை முதல் கொடநாட எஸ்டேட் பங்களா 7, 8, 9 ஆகிய நுழைவு வாயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீஸ் எஸ்.பி. முரளி ரம்பா, மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் பாஸ்கர், உள்பட 30 போலீசார் பாதுகாப்பு இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்து லேண்ட் லைன் மற்றும் செல்போன் அழைப்புகள் குறித்து இன்ஸ்பெக்டர் தலைமையில் வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

கொடநாடு எஸ்டேட்டில் கெரடாமட்டம் என்ற இடத்தில் புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கொடநாடு காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் அவதிப்படுகின்றனர்.

English summary
A New Check Post opened in Kodanad Estate,security has tightened.Tourists are struggling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X