For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”வாயில்லா ஜீவன்களுக்கும் வாழ்க்கை” - கால்நடைக்களுக்கு உணவு வழங்கு பணியில் தன்னார்வ நிறுவனங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையும், உணவு வழங்கும் பணியில் "பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா" அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Ngo's gives food for cattle

இவர்கள் தாம்பரம், வேளச்சேரி, ராமபுரம், வியாசர்பாடி, கோட்டூர்புரம், கே.கே.நகர், முடிச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கால்நடை மருத்துவர்களுடன் சென்று அடிப்பட்ட 300 கால்நடைகள், 100 நாய்கள், 50 பூனைகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

இதுதவிர 10 ஆயிரம் விலங்குகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கும் புதிதாக தயாரிக்கப்பட்ட விஷேச உணவுகள், உலர்ந்த பழங்கள், தீவனங்கள், புல் கட்டுகள் அளித்துள்ளனர்.

Ngo's gives food for cattle

தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் இந்த அமைப்பினருடன் டெல்லி, பெங்களூரில் இருந்து வந்துள்ள இந்திய வனவிலங்குகள் அறக்கட்டளையினர், அகில உலக வனவிலங்குகள் நிதி அமைப்பினர் மற்றும் அவசர நிவாரண உதவி அளிக்கும் நெட்ஒர்க் அமைப்பினரும் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Ngo's gives food for cattle

கால்நடைகள் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் 98415-88852 மற்றும் 95001-49181 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளித்தால் கால்நடை மருத்துவர்களுடன் சென்று சிகிச்சை அளிக்கப்படும். மேற்கண்ட தகவலை அமைப்பு நிறுவனர் அருண் பிரசன்னா தெரிவித்து உள்ளார்.

English summary
NGO's giving food for cattle in Chennai for Flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X