நிர்மலா தேவி விவகாரம்: விசாரணை அறிக்கையை ஆளுநரிடம் சமர்பித்தார் சந்தானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நிர்மலா தேவி விவகாரம் பற்றிய விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் ஆளுநரிடம் சமர்பித்துள்ளார்.

அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் தனது கல்லூரி மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்துள்ளார்.இது குறித்து ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் மாணவிகளின் புகாரின் பேரிலும் அருப்புக் கோட்டை போலீஸார் கைது செய்தனர்.

Nirmala Devi Issue: Santhanam submits his investigation report to TN Governor

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில் இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்தார்.

ஒரு நபர் குழுவான அதன் தலைவர் சந்தானம் விசாரணைகளை நடத்தி முடித்துவிட்டு வரும் 15-ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை ஆளுநரிடம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்தாலும் அதை வெளியிட கூடாது என்று என்று பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நிர்மலா தேவி விவகாரம் பற்றிய விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் ஆளுநரிடம் சமர்பித்துள்ளார்.மேலும் விசாரணை அறிக்கையை நீதிமன்ற உத்தரவுப்படி சீலிடப்பட்ட கவரில் வைத்து சமர்ப்பித்து உள்ளார். விசாரணையை முடித்து ஆளுநரிடம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளதால், இந்த அறிக்கை வெளியிடப்படாது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nirmala Devi Issue: Santhanam submits his investigation report to TN Governor. As Chennai High court bans to release the report of Santhanam committee in Public, they have submitted the report to Governor in person only.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற