எடப்பாடி பேச்சை யாருமே கேட்பது இல்லை... கட்டுப்பாடும் இல்லை: செம்மலை விளாசல்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: அதிமுக அம்மா அனியில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை அமைச்சர்கள் மதிப்பதும் இல்லை என ஒபிஎஸ் ஆதரவாளர் செம்மலை எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

மேட்டூரில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் ஓபிஎஸ் அணியில் செம்மலை முன்னிலையில் இணைந்தனர். இந்த நிகழ்வு மேட்டூரில் நடைபெற்றது.

 No one in Admk Amma team has is under the control of CM Edappadi said Semmalai

அப்போது பேசிய செம்மலை, ''அதிமுக அம்மா அணியில் திரைமறைவில் ஒன்று பேசுகிறார்கள். ஊடகத்திடம் ஒன்று பேசுகிறார்கள். அங்கு கட்டுப்பாடு என்பது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. அமைச்சர்கள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதல் இல்லாமல் ஊடகங்களிடம் ஆளாளுக்கு ஒன்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவரவர் இஷ்டத்துக்கு இயங்கும் நிலையில் அதிமுக அம்மா அணியினர் உள்ளனர்'' என கூறினார்.

செம்மலை கூறுவது உண்மைதான் என்பது போல அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், வைகை செல்வனும் ஒருவரையொருவர் அழுகின தக்காளி, சினிமா போஸ்டர் ஒட்டியவர் என நாலாந்தரமாக ஊடகங்களிடம் பேசுவது பொதுமக்களிடையே அருவெறுப்பை உண்டாக்கியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MLA Semmalai criticized that no one in Admk Amma team has is under the control of CM Edappadi. Minister is talking without any sense.
Please Wait while comments are loading...