ரெஸ்ட் எடுக்கும் மழை.. காலையில் இருந்து தெளிவாக வானம்.. சாயங்காலம் என்ன நடக்குமோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை காலை முதல் மழையின்றி வானம் தெளிவாகக் காணப்படுகிறது. ஆனால் இன்றும் இடியுடன் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று காலையில் இருந்து சுள்ளென வெயில் காய்ந்தது. மழை பெய்த சுவடே தெரியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.

ஆனால் நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடானது.

கணிப்புகளையும் தாண்டி பலத்த மழை

கணிப்புகளையும் தாண்டி பலத்த மழை

வானிலை மைய கணிப்புகளையும் தாண்டி பலத்த மழை கொட்டியது. இதனால் வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

பெரும் இன்னல்

பெரும் இன்னல்

பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. போக்கு வரத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாயினர்.

வெயிலும் தலைக்காட்டுகிறது

வெயிலும் தலைக்காட்டுகிறது

இந்நிலையில் இன்று காலையில் இருந்து சென்னையில் மழை ஓய்ந்துள்ளது. சில பகுதிகளில் அவ்வப்போது வெயிலும் தலைக்காட்டுகிறது.

பல பகுதிகள் மேக மூட்டம்

பல பகுதிகள் மேக மூட்டம்

அதேநேரத்தில் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. சென்னை நகரின் பல பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

மக்கள் அச்சம்

மக்கள் அச்சம்

இந்நிலையில் இன்று மாலையும் மழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் நேற்றுப் போல் மழை கொட்டுமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
No rain in chennai from morning. sometimes its hot sun in some places of Chennai.
Please Wait while comments are loading...