ப்ளஸ்டூவில் செவிலியர் பயிற்சி படித்த மாணவிகளுக்கும் சம வாய்ப்பு: வைகோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
Nursing students TN government take action : Vaiko
சென்னை: மேல்நிலைப் பள்ளிகளில் செவிலியர் பயிற்சிப் பிரிவில் பயின்ற மாணவிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கி, அரசு செவிலியர் கல்லூரிகளில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "2013-2014 ஆம் கல்வி ஆண்டிற்கான செவிலியர் பட்டயப் படிப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் 10,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் பயின்ற மாணவர்கள் மட்டுமே செவிலியர் பட்டயப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மாற்றி, கடந்த ஆட்சிக் காலத்தில் மேல்நிலையில் எந்தப் பிரிவில் பயின்றவர்களும் சேரலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், இந்தக் கல்வி ஆண்டிலிருந்து அறிவியல் பிரிவில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை எனவும், காலி இடங்கள் இருந்தால் மற்றப் பிரிவுகளில் பயின்றவர்களை சேர்த்துககொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளில் கணிதம், அறிவியல், கணினி அறிவியல் போன்று செவிலியர் பயிற்சிப் பிரிவும் 76 பள்ளிகளில் தமிழகம் முழுவம் நடைபெறுகிறது. இதில் சேரும் மாணவியர்கள் செவிலியர் ஆகவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு இந்தப் பிரிவில் சேர்ந்து பயில்கிறார்கள். இவர்களுக்கும் இடமில்லை என்று சொல்வது வேதனைக்குரிய செயலாகும்.இந்தக் கல்வி ஆண்டில் விண்ணப்பித்து இருந்த 2,000க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயில்வதற்கு இடம் கிடைக்காமல் எதிர்காலம் இருண்டுவிட்ட வேதனையில் தவிக்கின்றனர்.

மேலும், தற்பொழுது பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பயிலும் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, மனிதாபிமானத்துடன் இப்பிரச்னையை அணுகி மேல்நிலைப் பள்ளிகளில் செவிலியர் பயிற்சிப் பிரிவில் பயின்ற மாணவிகளுக்கும், அறிவியல் பிரிவில் படித்த மாணவிகளுக்கும் சமவாய்ப்பு அரசு செவிலியர் கல்லூரிகளில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்தக் கல்வி ஆண்டில் விண்ணப்பித்து இருந்த 2,000க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயில்வதற்கு இடம் கிடைக்காமல் எதிர்காலம் இருண்டுவிட்ட வேதனையில் தவிக்கின்றனர்.

மேலும், தற்பொழுது பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பயிலும் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, மனிதாபிமானத்துடன் இப்பிரச்னையை அணுகி மேல்நிலைப் பள்ளிகளில் செவிலியர் பயிற்சிப் பிரிவில் பயின்ற மாணவிகளுக்கும், அறிவியல் பிரிவில் படித்த மாணவிகளுக்கும் சமவாய்ப்பு அரசு செவிலியர் கல்லூரிகளில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Randomized to girls attending secondary schools offering nursing unit, nursing colleges include state government to take action MDMK general secretary Vaiko said.
Please Wait while comments are loading...