For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல கோடி பணத்துடன் சென்னைக்குள் சுற்றும் கார்கள்.. விரட்டும் ஐடி.. அதிர வைக்கும் ஆபரேஷன் பார்க்கிங்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அடிக்கடி நடக்கும் அதிரடி ஐடி ரெய்டுகள்...பின்னணி என்ன?- வீடியோ

    சென்னை: சென்னையில் இன்று நடந்து வரும் ஐடி ரெய்டுகளின் பின்னணி என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
    'ஆபரேஷன் பார்க்கிங் மனி' என்ற பெயரில் நடக்கும் இந்த ரெய்டின் பின்னணியில் கார்கள்தான் குறியாக உள்ளதாம்.

    அருப்புக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் சென்னை அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது.

    Operation Parking is the code name for IT raid in Chennai

    காலை முதல் மாலை 5 மணிவரையிலான நிலவரப்படி, பெரம்பூரில் ரூ.81 கோடி, தாம்பரத்தில் ரூ.19 கோடி பறிமுல் செய்யப்பட்டுள்ளது. கார்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை பறிமுதல் செய்யவே இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.

    வருமான வரித்துறை ரெய்டுகளுக்கு பயந்து வீடு, அலுவலகங்களில் ஆவணங்கள், பணத்தை கருப்பு பண முதலைகள் வைப்பதில்லையாம். கார்களில் அவற்றை வைத்து, சென்னையின் பல பகுதிகளிலும் அவற்றை பார்க்கிங் செய்து வைத்துள்ளார்களாம். இதை மோப்பம் பிடித்துள்ள உளவுத்துறை, வருமான வரித்துறைக்கு 'இன்புட்' கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் கார்களை விரட்டி விரட்டி வேட்டையாடி வருகிறதாம் வருமான வரித்துறை.

    இதையறிந்த பண முதலைகள், கார்களுக்கு அலர்ட் செய்துள்ளதால், பார்க்கிங் செய்யப்பட்டிருந்த பல கார்கள் இப்போது மாயமாகியுள்ளதாம். சென்னை நகருக்குள் அவை பணத்தோடு சுற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் கோடிக்கணக்கான பணத்துடன் உலா வரும் கார்கள் மற்றும் அவற்றை துரத்தி கண்காணிக்கும் வருமான வரித்துறையினரின் கண்ணா மூச்சி ஆட்டத்தால் சென்னை நகரில் பரபரப்பு நிலவுகிறது.

    English summary
    Operation Parking is the code name for IT raid in Chennai, officials follows ars for detect Money.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X