மோடி வருகைக்கு எதிர்ப்பு.. கிருஷ்ணகிரியில் வீடுகள் தோறும் கறுப்புக் கொடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

  மோடிக்கு எதிர்ப்பு..கருப்பு சட்டையில் கருணாநிதி...வீட்டில் கருப்புக் கொடி- வீடியோ

  கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அத்துடன் எதிர்கட்சிகள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

  பிரதமர் மோடி அவர்கள் இன்று தமிழகம் வந்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு பிரதமர் துரோகம் இழைப்பதாக கூறி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

  Opposition to PM Modi visit-Krishnagiri districts black

  அதன்படி இன்று கிருஷ்ணகிரி பழையபேட்டை, ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

  தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு கருப்பு சட்டை அனிந்தும், கருப்பு பட்டை அணிந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி திரும்பி செல்ல வேண்டும், தமிழகத்திற்குள் வர கூடாது என்பன உள்ளிட்ட கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  In opposition to the Prime Minister's arrival in Krishnagiri, the public showed their opposition to building black flag. The demonstration also took place on behalf of the opposition parties. In the demonstration, the cauvery management board had set up a cauvery management board for Tamilnadu to go back to India, not to come into Tamil Nadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற