ஈபிஎஸ்க்கு எதிரான ஓபிஎஸ் போராட்டம்...ஒத்திப்போட்டது ஏன்? பரபர பின்னணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக டெங்கு காய்ச்சல் போராட்டத்தை திடீரென ஒருவாரத்திற்கு ஒத்திப்போட்டுள்ளார் ஓபிஎஸ். இதற்கு காரணம் போலீசார் அனுமதி வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, அமைச்சர்களுடனான ரகசிய பேச்சுவார்த்தையும்தானாம்.

தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து வருகிற 10ஆம் தேதி ஓ.பி.எஸ். முன்னிலையில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போராட்டம் தொடரும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென போராட்டம் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

அதிமுகவில் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி பகிரங்கமாக மூன்று அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து வருகிறது. அணிகள் விரைவில் இணையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

ஆனால் அரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தது ஓபிஎஸ் அணி. ஊழல் அரசுக்கு எதிரான போராட்டம் என்று அறிவித்தார் ஓபிஎஸ். முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தலைமயில் வருகிற 10ம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனா்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட் தோ்வு விவகாரம், குடிநீா் பிரச்சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்கள் நலன் கருதி விரைவான முடிவினை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 10ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 18ல் போராட்டம்

ஆகஸ்ட் 18ல் போராட்டம்

இந்த நிலையில் காவல் துறையினா் 10ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து அதிா்ச்சியடைந்த புரட்சித் தலைவி அணியினா் போராட்டம் வருகிற 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனா்.

ஈபிஎஸ்க்கு எதிரான போராட்டமா?

ஈபிஎஸ்க்கு எதிரான போராட்டமா?

இந்த போராட்டத்திற்கு முன்னாள் அவைத் தலைவா் மதுசூதனன் தலைமை வகிப்பாா் என்றும், ஓ. பன்னீா் செல்வம் முன்னிலை வகிப்பாா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டதில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு போராட்டம் மூலம் எதிா்ப்பு தொிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கருக்கு செக்

விஜயபாஸ்கருக்கு செக்

இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு செக் வைக்கும் விதமாகமே இந்த போராடத்தை ஓபிஎஸ் மூலமாக ஈபிஎஸ் தூண்டி விட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஓபிஎஸ் அணியினரும் குறி வைப்பது விஜயபாஸ்கரைத்தான். ஊழல் அமைச்சர்கள், பினாமியை கொண்ட அமைச்சர்கள் என்று குற்றம் சாட்டி வருகின்றனர் ஓபிஎஸ் அணியினர்.

Kamal Should Speak Respectively Says OPS-Oneindia Tamil
அணிகள் இணையவும் வாய்ப்பு

அணிகள் இணையவும் வாய்ப்பு

அணிகள் இணையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக கூறி வருகிறார். இந்த சூழ்நிலையில் போராட்டத்தை ஓத்தி போட்டுள்ளார் ஓபிஎஸ். காவல்துறை அனுமதியில்லை என்று கூறினாலும், அமைச்சர்களின் ரகசிய பேச்சுவார்த்தை காரணமாகவே போராட்டம் ஒத்திப்போடப்பட்டுள்ளது என்று பேசிக்கொள்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here is the background story of Former CM OPS team why postpone protest against tamil nadu government on August 18.
Please Wait while comments are loading...