For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நலத்திட்டம் செயல்படுத்துவதாக ஏமாற்றி நிதி மோசடி... திருச்செந்தூர் அருகே பஞ்சாயத்து தலைவர் கைது

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே அரசு நிதியை மோசடி செய்ததாக பஞ்சாயத்து தலைவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் நங்கைமொழி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் உதயகுமார். இதே பஞ்சாயத்தில் துணை தலைவராக ஆணையூரை சேர்ந்த சித்ரலேகாவும், செயலாளராக கீதா என்பவரும் இருந்து வருகின்றனர். பஞ்சாயத்து மூலம் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் அனைத்திருக்கும் செலவு செய்யப்படும் பணம் இவர்கள் கட்டுபாட்டில்தான் இருக்கும்.

Panchayat fund fraud: Chairman arrested

பஞ்சாயத்து சார்பில் மேற்கொள்ளப்படும் அரசு திட்டங்களான சாலைகள் அமைப்பது, தெருவிளக்குகள் அமைத்தல், குடிநீர் வசதிகள் செய்தல் ஆகிய அனைத்து திட்டங்களுக்கும் அரசு அளிக்கும் நிதியை பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் உதயகுமார் பெற்று திட்டங்களுக்கு செலவிட முடியும். இதற்காக அரசு ஒதுக்கியுள்ள நிதியை வட்டார வளர்ச்சி அலுவலர் உதவியுடன் இவர்கள் சேர்ந்து கையெழுத்திட்டால் மட்டுமே வங்கியில் இருந்து பெற முடியும்.

இந்நிலையில், இந்த பஞ்சாயத்தில் நலத்திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கலெக்டர் ரவிகுமாருக்கு தகவல் சென்றது. இதனால் கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து, உடன்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்புலெட்சுமி தலைமையிலான அதிகாரிகள் நங்கைமொழி பஞ்சாயத்து கணக்குகளை தணிக்கை செய்தனர்.

இதில் கடந்த 2013 மே மாதம் முதல் தற்போது வரையில் ரூ.36 லட்சம் வரை மோசடியாக அரசு நிதி அபரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் போலி ஆவணங்கள் மூலமும், போலி கையெழுத்து போட்டும் பஞ்சாயத்து நிதியை வங்கியிடம் இருந்து பெற்று மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்புலெட்சுமி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார்.

இதையடுத்து, மாவட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பஞ்சாயத்து தலைவர் உதயகுமார், துணை தலைவர் சித்ரலேகா, செயலாளர் கீதா ஆகியோர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இவர்களுக்கு வங்கியின் மேலாளர் உடந்தையாக இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த 3 பேரையும் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். வங்கி மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
3 persons, including Panchayat chairman, were arrested by police following the fraudulent complaints about Panchayat fund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X