For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'செக்' கொடுப்பதற்கு ரூ. 1500 லஞ்சம்.. ஊராட்சி ஊழியர் கைது!

Google Oneindia Tamil News

சுரண்டை: தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தில் அரசு வழங்கும் காசோலையை வழங்கு ரூ.1500 லஞ்சம் வாங்கிய ஊராட்சி உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

சுரண்டை அருகேயுள்ளது ஊத்துமலை. இப்பகுதியில் வசிப்பவர் சின்னதுரை. இவர் தமிழக அரசின் பசுமைத் திட்டத்தில் அரசின் மானியத்தோடு வீடுகட்டி வருகிறார்.இவர் முதல்கட்ட பணிகளை முடித்துவிட்டு உரிய ஆவணங்களை ஊத்துமலை ஊராட்சியில் வழங்கியுள்ளார்.

இதையடுத்து முதல்கட்ட தவணையாக ரூ30ஆயிரம் காசோலையாக வந்துள்ளது.அது அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் உள்ளது.அதனை பெறுவதற்கு சின்னதுரை சென்று கேட்டுள்ளார். அதற்கு, காசோலை தர ரூ.1500 லஞ்சமாக தந்தால்தான் தரமுடியும் என்று உதவியாளர்.திருமலைசாமி ,சின்னத்துரையிடம் தெரிவிக்கவே அவர் இது குறித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.

புகாரைத்தொடர்ந்து டி.எஸ்.பி.தங்கசாமி,இன்ஸ் பெக்டர் கந்தசாமி உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று மறைந்து நின்றனர்.அப்போது திருமலைசாமி யிடம் சின்னத்துரை ரூபாய்.1500.ஐ கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திருமலை சாமியை கையும்,களவுமாக பிடித்து கைது செய்தனர்.பின்னர் நெல்லைக்கு அழைத்துசென்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

English summary
A panchayat staff was arrested for accepting graft near Surandai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X