நோயாளிகளின் உறவினர்களும் போராட்டத்தில் குதித்ததால் மிரண்டுபோன சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்  ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

patient's relatives were protesting in Rajiv gandhi hospital

இதனால் நோயாளிகளின் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். மருத்துவமனை வளாகத்தில் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டதால் நோயாளிகளின் உறவினர்களும் போராட்டத்தை திரும்ப பெற்றனர். போராட்டங்கள் திரும்பப்பெறப்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் இயல்பு நிலை திரும்பியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Patients relatives also were protesting against doctors. They were urging doctors to withdra
Please Wait while comments are loading...