சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்தான்.. கீழடி ஆய்வில் கண்டுபிடிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்தான் என்று கீழடி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூருக்கு அடுத்தபடியாக கீழடியில்தான் அதிக பெரிய அளவில் அகழாய்வு நடந்து கொண்டு இருக்கிறது.நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கீழடியில் கிடைத்து இருக்கும் தமிழ் எழுத்துக்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. இவ்வளவு கூறப்பட்டு வந்த வரலாற்றை மொத்தமாக மாற்றும் வகையில் இந்த செய்திகள் இருக்கிறது.

2200 ஆண்டுகள்

2200 ஆண்டுகள்

2017 நடத்தப்பட்ட அகழாய்வு முடிவுகளின் படி கீழடியில் கிடைத்த பொருட்கள் மிகவும் பழமையானது. அங்கு கிடைத்த வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் 2200 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இதுதான் மிகவும் பழமையான நாகரீகம் என்றும் கூறப்பட்டது.

தமிழ்

தமிழ்

இதில் காணப்பட்டது அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் ஆகும். இதில் பழைய தமிழ் எழுத்து முறைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபித்துள்ளார்கள். சங்க கால தமிழ் ஓலைச்சுவடிகளை போலவே இந்த எழுத்துக்கள் இருக்கின்றது.

சிந்து சமவெளி ஆய்வுகள்

சிந்து சமவெளி ஆய்வுகள்

இந்த மாதிரியான எழுத்துக்கள் சிந்து சமவெளி ஆய்விலும் கிடைத்து இருக்கிறது. அங்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகள் ஆகும். இதனால் சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி தமிழ் மொழிதான் என்று கூறப்பட்டு இருக்கிறது.

ஆய்வு

ஆய்வு

இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சிகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் கீழடியில் நடத்தப்படும் ஆய்வுகள் பல முக்கியமான வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் என்று சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்து இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People spoke Tamil Indus Valley Civilization says Keezhadi excavation result. It will completely change the history of India.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற