பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி.. ஏப்ரல் முதல் வாரம் தொடக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் 4 இடங்களில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 800 முதல் 1000 ஆசியர்கள் இந்த பணியில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது. தற்போது வரை 6 பாடங்களுக்கு தேர்வுகள் முடிந்துள்ளது. எப்போதும் மொழித்தாள் முடிந்தவுடன் விடைத்தாள் திருந்தம் தொடங்கப்படும்

ஆனால் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு ஒரு சமயங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணியை தேர்வுத் துறை தாமதமாக தொடங்க உள்ளது

Plus 2 answer sheets correction work starts on April first week

இந்நிலையில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பிளஸ் 2 தேர்வு விடைதாள்கள் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து ஏப்ரல் முதல் வாரத்தில் திருத்தும் பணிகள் தொடங்குகிறது.

இதனைத்தொடர்ந்து சென்னையில் 4 இடங்களில் பிளஸ் 2 தேர்வு விடைதாள்கள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா நகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளி, சூளை மேட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி பள்ளி, சாந்தோம் செயின்ட் ரபேல் பள்ளி, ராயபுரம் செயின்ட் பீட்டர் பள்ளி என நான்கு மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து ஏப்ரல் 6ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி படிப்படியாக தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி மொழித்தாள்கள் முழு வீச்சில் திருத்தப்படும். இதில் ஒரு மையத்திற்கு 250 ஆசிரியர்கள் என 800 முதல் 1000 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Plus 2 Answer sheets correction work starts on April first week. +2 public exams were conducted in Tamil Nadu & Pondicherry from 2nd March
Please Wait while comments are loading...