பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு.. அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் மோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கை செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் புத்தர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்.

புத்தர் பிறந்தநாள் மற்றும் புத்த மதத்தின் புத்தாண்டு கொண்டாட்டம், மே மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சீனா, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட உள்ளது.

PM Modi to visit Sri Lanka on May 12

இந்த சந்தர்ப்பத்தில், புத்தமதம் தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றை புத்த மதத்தினர் அதிகமாக வாழும் இலங்கையில் நடத்தலாம் என ஐ.நா. சபை தீர்மானித்துள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இதற்காக அவர் மே 12ம் தேதி டெல்லியில் இருந்து புறப்படுச் செல்வார்.

புத்தமத விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இலங்கை நீதித்துறை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சே கொழும்புவில் செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தினார். இந்த விழாவில் பங்கேற்கும் மோடி, இந்தியா உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றையும் திறந்து வைக்க உள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister Narendra Modi will inaugurate the14th United Nations Day of Vesak celebration in Sri Lanka on May 12 under the theme ‘Buddha’s Teachings, Social Justice and Sustainable World Peace’.
Please Wait while comments are loading...