குரங்கணி மலை பகுதியில் தீவிபத்தில் பலியான 9 பேருக்கு உடற்கூறாய்வு சோதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: குரங்கணி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் பலியான 9 பேருக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி வனபகுதிக்கு 36 பேர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். நேற்று மலையிலிருந்து திரும்பி கொண்டிருந்த போது காட்டுத் தீ ஏற்பட்டது.

Post Mordem is being conducted for those who died in Theni

இதனால் தீ சுவாலை தாங்காமல் அவர்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில் 40 அடி பள்ளத்தில் விழுந்த 9 பேர் பலியாகிவிட்டனர். இந்நிலையில் 17 பேர் காயமடைந்தனர். இவர்கள் மதுரை மற்றும் தேனி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குரங்கணி காட்டுப் பகுதியில் மீட்பு பணிகள் நிறைவடைந்துவிட்டன. மீட்கப்பட்ட 9 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவர்களுள் கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த சுபா என்பவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Post Mordem is being conducted for those who died in Theni forest fire accident. Rescue operation completes.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற