For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டாயப்படுத்தி டியூசன் சேர்த்தால் கடும் நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களைக் கட்டாயப்படுத்தி தனிவகுப்பு நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

"பள்ளிகளில் உயர் வகுப்புகளில் பயிலும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, அவர்களிடம் கட்டணம் வசூலித்து தனி வகுப்பு நடத்துவதாக அரசுக்குப் புகார் வந்துள்ளது.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாகத் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனி, இது போன்ற செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

English summary
The School of Education Department has clearly stipulated that it is against their laws for school teachers to offer their students private tuition sessions, many teachers continue this trend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X