காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்ற உத்தரவு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துரையில் உயர்பொறுப்பில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றமும் பதவி உயர்வும் வழங்கி தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

Promotion and transfer order to IPS officers

அவர் வெளியிட்டுள்ள ஆணையில், வெளியிட்டுள்ள ஆணையில் 5 பேருக்கு பதவி உயர்வும், 9 பேருக்கு இடமாற்றமும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

பொருளாதார குற்ற பிரிவு ஏடிஜிபியாக பதவி வகித்த ஜாங்கிட், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தின் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியாக பதவி வகித்த ஜே.கே திரிபாதி, தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய வாரியத்தின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஏடிஜிபியாக இருந்த சி.கே.காந்திராஜன், பதவி உயர்வு பெற்று, மாநில மனித உரிமை ஆணையத்தின் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சுகித் குமார், ரோஹித் நாதன் ஆகிய இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Home secretary Niranjan Mardi released an order of promotion to 5 IPS officers and transfer to 9 IPS officers.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற