நீட் வேண்டாம்... காலவரையற்ற போராட்டத்தில் குதித்த தஞ்சை மாணவர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சை தமிழ் பல்கலை கழகம் மற்றும் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் மாணவி அனிதா நீட் தேர்வால் தன் வாழ்க்கையும் கனவும் சிதைந்த காரணத்தால் மரணம் அடைந்தார். அன்றிலிருந்து தொடங்கி கடந்த 10 நாட்களாக தமிழகம் மட்டுமில்லாது உலகமெங்கும் வாழும் தமிழர்கள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

Protest again neet extending in Tanjore

இந்நிலையில், இதுவரை கல்லூரி மணவர்கள் மட்டும் போராட்டி வந்த நிலையில் சில இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். அதுவும் சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டம் பலரையும் வீதிக்கு வந்து நீட்டுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணைத்தைக் கொடுத்துள்ளது.

மேலும், மாணவர்கள் தொடர்ந்து போராடியதால் பல கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் போராடும் மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு சிறையில் திருநங்கைகள் இருவர் உள்பட 12 மாணவர்கள் உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tanjore University students and College students announced strike untill neet exam get vanished.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற