தாம்பரம் அருகே பயங்கரம்.. புரட்சி பாரதம் நிர்வாகி வெட்டிக்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி முருகனை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

Puratchi Bharatham functionary hacked to death

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முருகன் கொலை சம்பவம் பழிக்கு பழி வாங்கலா, முன் விரோதம் காரணமாக நடந்ததா என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த புரட்சி பாரதம் கட்சி மாவட்ட அமைப்பாளர் ராஜா மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதே போல கடந்த ஏப்ரல் மாதம் திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி வெட்டிக்கொல்லப்பட்டார். கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது அந்த கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puratchi Bharatham functionary hacked to death at Mannivakkam near Thambaram
Please Wait while comments are loading...