For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டேய் போகாதடா வேண்டாம்.. ஆமாடா.. நகர்ந்து வருது.. ஐயோ வா ஓடிடலாம்!

மலையடிவாரத்தில் நடமாடும் பாம்பின் வீடியோ வைரலாகி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கடையநல்லூர் பகுதியில் சுற்றிய 20 அடி நீளம் உடைய பாம்பு

    கடையநல்லூர்:

    இடம் கடையநல்லூர்..

    டேய்... அங்க என்னடா செடிகிட்ட?

    ஏதோ ஸ்பீட் ப்ரேக் போல இருக்குடா...

    அரிவாள் எடுத்துட்டு போகாதேடா... வேண்டாம் போகாதே... திரும்பி வந்துடு

    ஆமாண்டா... நகர்ந்து வர மாதிரி இருக்கு...

    டேய்.. அது பாம்புடா... வாடா ஓடிடலாம்...

    இப்படித்தான் அலறி அடித்து கொண்டு ஓடியது அந்த இளைஞர் பட்டாளம்.

    அடர்ந்த மூங்கில் காடு

    அடர்ந்த மூங்கில் காடு

    கடையநல்லூரில் அருகே ஒரு 5 கி.மீ. தொலைவு போனால் ஒரு மலையடிவாரம் உள்ளது. அந்த இடத்திற்கு பெயர் கல்லாறு. இந்த பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு பூராவும் வனப்பகுதிதான். அதனால் பயங்கரமான மிருகங்களான சிறுத்தை போன்றவை நிறைய நடமாடும். இந்த அடர்ந்த மரங்கள் அடங்கிய இடத்தில் மூங்கில் காடும் உண்டு. இந்த மூங்கில் காட்டில் நிறைய விவசாயிகள் அடிக்கடி வந்து செல்வார்கள்.

    கண்டிப்பாக மலைப்பாம்புதான்

    கண்டிப்பாக மலைப்பாம்புதான்

    அதோடு அந்த இடத்தில் இருக்கும் ஒரு ஓடை அந்த பகுதியில் ரொம்ப ஃபேமஸ். அதனால் அந்த பகுதி இளைஞர்கள் அடிக்கடி அங்கு குளிப்பதற்காக செல்வார்கள். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பும் கல்லாறு ஓடைக்கு குளிக்க போனார்கள். அங்குதான் இந்த பாம்பை கண்டார்கள். 20 அடி நீளம் என்றால் அது கண்டிப்பாக மலைப்பாம்புதான் போலிருக்கிறது.

    அசுர பாம்பு

    அசுர பாம்பு

    அந்த பாம்பை பார்த்ததும் இளைஞர்கள் ரொம்பவே பயந்துவிட்டார்கள். காரணம் அச்சுஅசலாக அனகோண்டா பாம்பு போலவே இருந்ததாம் அது. அனகோண்டா அமேசான் காட்டில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கோம். இல்லையென்றால் சினிமாவில்தான் அந்த அசுர பாம்பை பார்த்திருக்கிறோம். இப்போது நம்ம ஊரில் ஒரு "மினி அனகோண்டாவா" என்பது ஆச்சரியமாகவும், பயமாகவும் உள்ளது.

    குட்டி அனகோண்டா

    குட்டி அனகோண்டா

    என்னதான் பீதி ஏற்பட்டு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் நம்ம ஆட்கள் அதனை செல்போனில் வீடியோ எடுக்க தவறவில்லை. அந்த வீடியோவை சமூகவலைதளங்களிலும் உலவ விட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்தால் உண்மையிலேயே அனகோண்டா மாதிரியே இருக்கிறது. செடிகள், புதர்கள் நிறைந்த பகுதிகளில் அந்த குட்டி அனகோண்டா அசைந்து அசைந்து ஹாயாக செல்கிறது.

    அனகோண்டாவுக்கு அரிவாளா?

    அதுக்கு பின்னால் நம்ம ஆட்கள் அரிவாள் ஒன்றினை எடுத்து கொண்டு போகிறார்கள். இந்த காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த பாம்பு நடமாட்டம் குறித்து மலையடிவார மக்களிடம் வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    English summary
    Python in the near Kadayanallure forest.. Video Viral
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X