For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

42 ஆண்டுகளுக்கு பின் ஜூலை 11 முதல் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: 42 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த ரயில்வே ஊழியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. திட்டமிட்டபடி இப்போராட்டம் நடைபெற்றால் நாடு முழுவதும் பயணிகள் ரயில்சேவை, சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகும்.

நாட்டில் மக்களின் அன்றாட போக்குவரத்து வசதியில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமானது. இந்த துறை 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. 14 லட்சம் பேர் இத்துறையில் பணியாற்றுகின்றனர். நாடுமுழுவதும் தினமும் 2.36 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.

Railway unions serve notice for strike from July 11

8 மணிநேரம் வேலை, பொதுத் துறைக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1974-ம் ஆண்டு நாடுமுழுவதும் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான இந்த போராட்டம் 20 நாட்கள் நீடித்தது. இப்போராட்டத்தில் பல லட்சம் ரயில்வே ஊழியர்கள் பங்கேற்க நாடு முழுவதும் ரயில்சேவை முடங்கிப் போனது. பல்லாயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷனில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், அடிப்படை ஊதியம் ரூ.26 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 11-ந் தேதியே வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்ததால் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக இந்த போராட்டத்தைத் தொழிற்சங்கங்கள் ஒத்தி வைத்திருந்தன.

இந்நிலையில் எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண் ணையா, டிஆர்இயூ சங்கத்தின் பொதுசெயலாளர் எ.ஜானகிராமன், எஸ்ஆர்இஎஸ் சங்கத்தின் பொது செயலாளர் சூர்யபிரகாசம் ஆகியோரின் தலைமையில் தனித் தனியாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துக்கு நேற்று பேரணியாக வந்தனர். பின்னர் தொழிற்சங்கங்களின் மூத்த நிர்வாகிகள் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோக்ரியிடம் வேலைநிறுத்தம் தொடர்பான நோட்டீஸ் வழங்கினர்.

ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்தபடி இப்போராட்டம் நடந்தால் 1974-ம் ஆண்டைப் போல நாடு முழுவதும் பயணிகள் ரயில்சேவை, சரக்கு போக்குவரத்து முற்றாக முடங்கும் நிலை உருவாகும்.

English summary
The word strike has once again reared its head in the country's massive railway system, with two of its biggest unions serving a formal notice to the railway authorities about a strike set to begin at 6am on July 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X