யாராவது ஊட்டிக்குப் போற பிளான் இருக்கா.. கேன்சல் பண்ணிட்டு மெட்ராஸுக்கு வாங்க.. செமயா இருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஊட்டியாக மாறிய சென்னை..எப்படி தெரியுமா?- வீடியோ

சென்னை: காலை 9 மணிக்கே மாலை 6 மணி போல் கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்துள்ளது. அடையாறு தரமணி உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 27 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே தீவிரம் காட்டிய மழை பல சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கொட்டித் தீர்த்தது.

இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. சென்னையில் உள்ள ஏரிகளும் நிரம்பியுள்ளன.

சென்னையில் மீண்டும் மழை

சென்னையில் மீண்டும் மழை

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக ஓய்வெடுத்த வடகிழக்குப் பருவமழை இன்று மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் காலை முதலே வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது.

இருள் சூழ்ந்துள்ளது

இருள் சூழ்ந்துள்ளது

சென்னை அடையாறு, தரமணி, திருவான்மியூர், அண்ணாநகர், புரசைவாக்கம், மேற்கு மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை போரூர், வளசரவாக்கம், வடபழனி ஆகிய இடங்களில் கருமேகம் திரண்டு இருள் சூழ்ந்துள்ளது.

புறநகரில் மேக மூட்டம்

புறநகரில் மேக மூட்டம்

கூடவே சில்லென காற்றும் வீசி வருகிறது. இதேபோல் பல்லாவரம், குரோம்பேட் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

மக்கள் மகிழ்ச்சி

மக்கள் மகிழ்ச்சி

சென்னையின் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rains in some places of Chennai. Chennai looks fully cloudy. Chennai climat also looks cool.
Please Wait while comments are loading...