வடகிழக்குப் பருவமழையால் இந்த மாவட்டதில்தான் கனமழை கொட்டுமாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  இடியுடன் வெளுத்து கட்ட போகும் கனமழை-வீடியோ

  சென்னை: வடகிழக்குப்பருவமழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

  போதுமான அளவு மழை இல்லாததால் விவசாயமும் பொய்த்துப் போனது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

  நிரம்பி வழியும் நீர் ஆதாரங்கள்

  நிரம்பி வழியும் நீர் ஆதாரங்கள்

  அதேநேரத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பொழிந்து ஆதரவளித்தது. இதனால் தமிழக நீர் ஆதாரங்கள் நிரம்பி வழிகின்றன.

  தமிழகத்தில் பரவலாக மழை

  தமிழகத்தில் பரவலாக மழை

  இந்நிலையில் தமிழகத்திற்கு அதிகமழையை தருவிக்கும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

  கனமழை கொட்டுமாம்

  கனமழை கொட்டுமாம்

  இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

  காற்றழுத்தம் உருவானால்..

  காற்றழுத்தம் உருவானால்..

  சென்னையை பொறுத்தவரை அவ்வபோது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அல்லது நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானால் தொடர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Ramanathapuram district will get more rain in the north east monsoon session said meteorological center. North east monsoon started in Tamil Nadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X