12 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படையை கண்டித்து இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
ராமேஸ்வரம்: 12 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி மார்க்கோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகை தடுத்து நிறுத்தினர்.

12 மீனவர்கள் கைது
அதிலிருந்த 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள், விசைப்படகுடன் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்டுள்ள 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையின் இச்செயலுக்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நிதியை பெற்றுக்கொண்டு கைதா?
"இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து அரசை மீட்பதற்காக இந்திய அரசு பல கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில் எல்லை தாண்டியதாக 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்." என்றனர்.

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திய மீனவர் சங்கத்தினர், படகுகளையும் விடுவிக்க கேட்டுக்கொண்டுள்ளனர். இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்."

இன்று மீனவர்கள் வேலைநிறுத்தம்
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 125 படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், அதில், தவறவிடப்பட்டுள்ள 4 படகுகளின் பெயர்களை சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். அத்துடன் 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications