For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”தென்னக காசி” ராமேஸ்வரத்தில் குடமுழுக்கு விமரிசையாக நிறைவு - தரிசனம் செய்த பக்தர்கள் வெள்ளம்!

Google Oneindia Tamil News

சென்னை: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

ராமேஸ்வரம் கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 5 நிலைகளுடன் 91 அடி உயரத்தில் வடக்கு, தெற்கு பகுதியில் இரண்டு கோபுரங்கள் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த 2 கோபுரங்களுக்கும் சேர்த்து இன்று குடமுழுக்கு நடத்தப்பட்டது.

Rameshwaram temple reform festival today

கோயில் மேல் தளத்தில் 4500 பக்தர்கள் நின்று கும்பாபிஷேகத்தை தரிசிக்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள ராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் ராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும்.

ராமேஸ்வரம் கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். இக்கோவிலில் ராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானங்கள் அமைந்திருக்கின்றன.

இக்கோவிலின் குடமுழுக்கு விழா இன்று விமரிசையாக பக்தர்கள் வெள்ளத்திற்கு இடையே நடைபெற்றது. மந்திர கோஷங்கள் முழங்க, புனித நீரை கலசத்தில் சிவாச்சாரியார்கள் ஊற்றி குடமுழுக்கினை நடத்தி வைத்தனர். 12 ஆண்டுகள் கழித்து நடைபெறும் இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமநாத சுவாமியின் அருள் பெற்றனர்.குடமுழுக்கு விழாவினையொட்டி ராமேஸ்வரம் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வடமாநிலம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ஹைகோர்ட் நீதிபதிகள் அக்னி கோத்திரி, சொக்கலிங்கம், மகாதேவன், தேவதாஸ், கோவிலின் இணை ஆணையர் செல்வராஜ், தக்கார் ராஜா குமரன் சேதுபதி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டி, அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, தி.மு.க. மாவட்ட செயலாளர் திவாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குடமுழுக்கு விழாவினையொட்டி ராமேஸ்வரம் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வடமாநிலம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ஹைகோர்ட் நீதிபதிகள் அக்னி கோத்திரி, சொக்கலிங்கம், மகாதேவன், தேவதாஸ், கோவிலின் இணை ஆணையர் செல்வராஜ், தக்கார் ராஜா குமரன் சேதுபதி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டி, அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, தி.மு.க. மாவட்ட செயலாளர் திவாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

English summary
Rameshwaram ramanadhaswamy temple reformation festival held finely today morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X