For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதுதான் ஆர்.கே.நகர் தொகுதி! 1977 முதல் இன்று வரை... ஏ டூ இசட் ரவுண்ட் அப்!

தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.

RK Nagar by-election results today

ஆர்.கே.நகர் தொகுதி பற்றிய முழுமையான பார்வை:

- டாக்டர் ராதாகிருஷ்ணன் தொகுதி (ஆர்.கே.நகர்) வடசென்னையில் இருக்கிறது.

- 1977-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி உருவாக்கப்பட்டது.

- ஆர்.கே.நகரில் இதுவரை வென்றவர்கள்:

1977- ஐசரி வேலன் (அதிமுக)

1980- வி. ராஜசேகரன் (இந்திரா காங்கிரஸ்)

1984- வேணுகோபால் (இந்திய தேசிய காங்கிரஸ்)

1989- எஸ்.பி. சற்குணம் (திமுக)

1991- இ. மதுசூதனன் (அதிமுக)

1996- எஸ்.பி. சற்குணம் (திமுக)

2001- பி.கே. சேகர் பாபு (அதிமுக)

2006- பி.கே. சேகர் பாபு (அதிமுக)

2011- பி. வெற்றிவேல் ( அதிமுக)

- 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற வெற்றிவேல் 2015-ம் ஆண்டு பதவியை ராஜினமா செய்தார். இதையடுத்து ஆர்.கே.நகருக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

- ஆர்.கே.நகர் தொகுதியில் 2015-ம் ஆண்டு முதலாவது இடைத் தேர்தல் நடைபெற்றது.

- 2015-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது இடைத் தேர்தல் முடிவுகள்:

ஜெயலலிதா (அதிமுக) 1,60,432

மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) 9,710

டிராபிக் ராமசாமி (சுயேட்சை)- 4,590

வாக்கு வித்தியாசம்: 1,50,722

2016- சட்டசபை பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதி முடிவுகள் விவரம்:

ஜெயலலிதா (அதிமுக)- 97218

சிம்லா முத்துசோழன் (திமுக) - 57673

வசந்தி தேவி (விடுதலை சிறுத்தைகள்)- 4195

ஆக்னஸ் (பாமக) - 3011

எம்.என். ராஜா (பாஜக) - 2928

நோட்டா- 2873

இத்தொகுதியில் 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

- 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா காலமானார்.

- 2016-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக சட்டசபை செயலாளராக இருந்த ஜமாலுதீன் அறிவித்தார்.

- 2016-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என மார்ச் 9-ந் தேதியன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏப்ரல் 12-ந் தேதி பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை ஏப்ரல் 15-ந் தேதி எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

- இந்த இடைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் களத்தில் இருந்த வேட்பாளர்கள்:

மதுசூதனன் (அதிமுக புரட்சித் தலைவி அம்மா)

தினகரன் (அதிமுக அம்மா)

மருதுகணேஷ் (திமுக)

கங்கை அமரன் (பாஜக)

கலைக்கோட்டுதயம்( நாம் தமிழர்)

- ஏப்ரல் 7-ந் தேதி தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரி சோதனை. ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் பிடிபட்டதாக தகவல் வெளியானது.

- ஏப்ரல் 10-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

- ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்கிவிட்டு தேர்தல் நடத்த வேண்டும்; வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நடவடிக்கை தேவை என இரு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

- நவம்பர் 21-ந் தேதியன்று இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆர்.கே.நகர் தேர்தலை டிசம்பர் 31-ந் தேதிக்குள் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

- நவம்பர் 24-ந் தேதியன்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ந் தேதி தேர்தல் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

- நவம்பர் 24-ல் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

- நவம்பர் 24-ந் தேதி முதல் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

- ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,28,234; ஆண்கள்: 110903 பெண்கள்: 117232; மூன்றாம் பாலினத்தவர்- 99

- ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: நவம்பர் 27

வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள்: டிசம்பர் 4

வேட்பு மனு பரிசீலனை செய்யும் நாள்: டிசம்பர் 5

வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: டிசம்பர் 7

வாக்குப்பதிவு நாள் : டிசம்பர் 21

வாக்கு எண்ணிக்கை நாள்: டிசம்பர் 24

- ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட மொத்தம் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவர்களில் 126 பேர் சுயேச்சைகள்.

- ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சைகளாக போட்டியிட தாக்கல் செய்த நடிகர் விஷால் மனு முதலில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

- டிசம்பர் 6-ந் தேதியன்று மொத்தம் 76 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

- டிசம்பர் 7-ந் தேதியன்று பரிசீலனைக்குப் பின் 59 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர்கள்:

மதுசூதனன் (அதிமுக)

மருதுகணேஷ் (திமுக)

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்)

கரு. நாகராஜ் ( பாஜக)

தினகரன் (சுயேச்சை)

- டிசம்பர் 19-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது.

- டிசம்பர் 21- ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

- இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

English summary
RK Nagar By-Eelection votes will be counted today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X