ஃபுல் மப்பில் இருந்ததால் கொத்தாக சிக்கிய சென்னை ரவுடிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் துப்பாக்கி முனையில் 69 ரவுடிகள் கைது- வீடியோ

  சென்னை: மலையம்பாக்கத்தில் ரவுடிகள் கொத்தாக சிக்கியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

  சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ரவுடி பினுவின் பிறந்த நாள் நேற்று முன்தினம் பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

  இதில் பினுவின் சிறை நண்பர்களான 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் பங்கேற்றனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில் பர்த்டே பாய் பினு வீச்சரிவாளால் கேக் வெட்டினார்.

  லாரி ஷெல்டரில் பார்ட்டி

  லாரி ஷெல்டரில் பார்ட்டி

  ஒட்டுமொத்த ரவுடிகளும் ஒன்றாக சங்கமிக்கும் தகவலை அறிந்த போலீசார் பிறந்த நாள் பார்ட்டி நடந்த மலையம்பாக்கம் வேலு லாரி ஷெல்டரை சுற்றி வளைத்தனர். போலீஸ் வாகனத்தில் சென்றால் தகவல் தெரிந்து ரவுடிகள் எஸ்கேப்பாகிவிடுவார்கள் என்று எண்ணிய போலீசார் தனியார் வாகனத்தில் சென்றனர்.

  75 ரவுடிகள் கைது

  75 ரவுடிகள் கைது

  மேலும் ரவுடிகளை போலவே மாற்று உடையில் சென்ற 40க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். 75 ரவுடிகளை போலீசார் அலேக்காக தூக்கினர்.

  ஃபுல் மப்பில் இருந்ததால்

  ஃபுல் மப்பில் இருந்ததால்

  100க்கும் மேற்பட்ட ரவுடிகள் பங்கேற்ற பர்த்டே பார்ட்டியில் 75 ரவுடிகளை மட்டுமே போலீசாரால் கைது செய்ய முடிந்தது. சிக்கிய இந்த 75 ரவுடிகளும் புல் மப்பில் தலைக்கால் புரியாமல் இருந்ததால் ஓட முடியாமல் பிடிபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நிதானமாக இருந்தவர்கள்

  நிதானமாக இருந்தவர்கள்

  நிதானத்துடன் இருந்த மற்ற ரவுடிகள் தப்பியோடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் தப்பியோடிய ரவுடிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

  புழல் சிறையில் அடைப்பு

  புழல் சிறையில் அடைப்பு

  கைது செய்யப்பட்ட 76 ரவுடிகளில் 71 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 5 ரவுடிகளுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The rowdies cought to police yesterday. The rowdies were caught drinking and were caught in full Drunkenness.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற