For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தா?... பரவி வரும் வதந்தியால் மக்கள் குழப்பம்

Google Oneindia Tamil News

நெல்லை: ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகி விடும் என தகவல் பரவி வருவதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இரண்டு கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2005ல் வழங்கப்பட்ட கார்டுகள் 2009ல் காலாவதியாகி விட்டது. இதற்கு உடனடியாக புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக உள்தாள் ஓட்டப்பட்டு வருகிறது.

Rumour on linking Aadhar number in Ration card panics public

இந்த நிலையில் 2012ல் ரூ.300 கோடி செலவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகளை ஓழிக்க முடியும் என அரசு நம்பியது. இதற்காக கடந்த 2014ல் டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் தனியார் வசம் ஓப்படைக்கப்பட்டது.

மேலும், ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு கண்ணின் கருவிழி, கை ரேகை பதிவு செய்து ஸ்மார்ட் கார்டு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஆதார் அட்டை பதிவில் பல்வேறு கோளாறுகள் இருப்பதால் ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. மா்றாக தனியார் நிறுவனம் மூலம் புதிய மென் பொருள் தயாரிககப்படடு ஸ்மார்ட் கார்டு வழங்க தீர்மானித்தது.

இந்த நிலையில் உள் தாள் ஓ்ட்டிய ரேஷன் கார்டுகள் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. பல வருடமாக ஒரே கார்டைப் பயன்படுத்தி வருவதால், பலரின் கார்டுகள் கிழிந்து கந்தலாகி விட்டது. இதனால் நடப்பாணடில் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் மீண்டும் ஆதார் எணணை இணைத்து ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுளளது.

காஸ் சிலிண்டர், வாக்காளர பட்டியலில் ஆதார் எண் இணைப்பு பணி முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படடுள்ளன.

இந்த நிலையில் ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என தகவல் பரவி வருவதால் பொதுமக்கள் திகைப்பில் உள்ளனர்.

English summary
A Rumour on linking Aadhar number in Ration card has created massive confusion among the people in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X