For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊரை விட்டுப் போறேன் என்ற கமல் அரசியல் பேசுவது ஏன், ரஜினியிடம் கடவுள் பேசிட்டாரா?: சரத்குமார்

By Siva
Google Oneindia Tamil News

சேலம்: பட பிரச்சனையில் ஊரைவிட்டு போகிறேன் என்ற கமல் எதற்கு தற்போது அரசியல் பேசுகிறார் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் 11ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூடம் சேலத்தில் நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சரத்குமார் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்பொழுது அவர் பேசியதாவது,

ரஜினி, கமல்

ரஜினி, கமல்

ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை வாயே திறக்காத ரஜினிகாந்தும், கமல் ஹாஸனும் அவர் மறைந்த பிறகு அரசியல் பற்றி பேசுவது ஏன்? ரஜினியும், கமலும் தமிழக மக்களுக்காக எதுவும் செய்யாதவர்கள்.

முதல்வர்

முதல்வர்

அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு முதல்வராகும் தகுதி உள்ளது. ஒரு சிலருக்கே முதல்வர் பதவி தானாக கிடைக்கும். கடின உழைப்பால் தான் முதல்வராக முடியும்.

வேண்டப்பட்டவர்கள்

வேண்டப்பட்டவர்கள்

திரையுலகினர் யாரையும் பகைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ரஜினியும், கமலும் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள். கடவுள் ரஜினியிடம் பேசிவிட்டாரா என்று தெரியவில்லை.

கமல்

கமல்

பட பிரச்சனையால் ஊரை விட்டு போவேன் என்று கூறிய கமல் தற்போது ட்விட்டர் மூலம் அரசியல் பேசுவது ஏன்?. ட்விட்டர் பதிவுகளை பார்த்துவிட்டு மக்கள் திசை திரும்பிவிடக் கூடாது.

தெளிவுரை

தெளிவுரை

கமல் ஹாஸனின் ட்விட்டர் பதிவுகளுக்கு தெளிவுரை எழுத நான் தயார். தமிழகத்தில் பாஜவுக்கு அ, ஆ எழுதியவனே நான் தான். அரசியல் குறித்து யாருடனும் விவாதிக்க தயார் என்றார் சரத்குமார்.

English summary
SMK chief Sarath Kumar has questioned Rajinikanth and Kamal Haasan for their sudden interest in politics after Jayalalithaa's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X