என்னமோ போடா மாதவா....

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரவணா ஸ்டோர் சரவணன் விளம்பரத்தில் நடிப்பது பற்றி கடந்த சில மாதங்களாகவே கிண்டலடித்து வருகின்றனர். அவர் தமன்னா, ஹன்சிகா உடன் ஆடி பாடி விளம்பரத்தில் நடித்து விட்டார். இப்போது ராஜூ சுந்தரத்துடன் விளம்பரத்தில் நடனமாடியுள்ளார். இனி சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போவதாக கூறியுள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

சிலரை பார்த்த உடன் பிடிக்காது. பார்க்கப் பார்க்க பிடிக்கும். சரவணன் விளம்பரத்தில் வருவதையும் இப்போது பலரும் ரசிக்க ஆரம்பித்து விட்டனர். 365 பட்டுப்புடவை வேண்டும் என்று ஒரு பெண் நீயா நானாவில் கேட்டதற்குக் கூடஉங்களுக்கு சரவணா ஸ்டோர் ஓனர்தான் சரி என்று மீம்ஸ் போடும் அளவிற்கு அவர் பிரபலமாகிவிட்டார்.

[Read This: படத்தில் நடிக்கிறேன், என் ஹீரோயின் நயன்தாரா: சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அறிவிப்பு]

அந்த தைரியத்தில்தான் அவர் ஹீரோவாக நயன்தாரா உடன் நடிக்க ஆசைப்படுவதாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் தங்க வேல் காணிக்கை சாற்றிய சந்தோசத்தில் கூறியுள்ளார். இது நயன்தாராவிற்கு தெரியுமா என்பது தெரியாது. ஆனால் அவரைப் பற்றி டுவிட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

என்னமோ போடா மாதவா

என்னமோ போடா மாதவா

நயன்தாராவுடன் ஹீரோவாக நடிப்பேன்.-சரவணா ஸ்டோர் உரிமையாளர்... #பத்து மாடி கட்டடம் கட்டி அது ஃபுல்லா துணிய அடுக்கி வச்சிருக்காரு ஆனா டூ பீஸ் நடிகை கூடத்தான் நடிப்பாராம் என்னமோ போடா மாதவா...

தாங்க முடியலையே

நீ விளம்பரத்துல நடிக்கிறதே தாங்கமுடில இதுல படத்துல வேறயா என்று கேட்டு பலரும் பதிவிட்டுள்ளனர்.

இதில் கிண்டலுக்கு ஏதுமில்லை

சரவணா ஸ்டோர் உரிமையாளர் நயன்தாராவுடன் நடிப்பதை கிண்டல் செய்ய ஏதுமில்லை; இதற்கு நயன்தாரா மறுப்பு தெரிவிக்காதவரை! என்று உண்மையை பதிவிட்டுள்ளார் ஒருவர்

அடுத்த பவர் ஸ்டார்

கதாநாயகனாக நயன்தாரா உடன் நடித்து திரையுலகில் கால்பதிப்பேன் - சரவணா ஸ்டோர் அதிபர் பேட்டி. அடுத்த பவர்ஸ்டார் ரெடி ஆகிட்டானே என்று பதிவிட்டுள்ளார். இவர் விஜய் ரசிகர். எங்கே விஜய்க்கு போட்டியாக வந்தாலும் வந்து விடுவார் என்ற ஆதங்கத்தில் போட்டிருக்கிறாரோ என்னவோ?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai Saravana stores owner was trolled by many people on social media.
Please Wait while comments are loading...