இடைக்கால பொதுச்செயலர் பதவி... ஆளைவிட்டால் போதுமென ஓடுகிறார் சசி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் மதுரையில் பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்து பேசத் தயார் என்று தெரிவித்திருந்தார் என்றார்.

Sasikala is going to resign ADMK's general secretary post?

இந்நிலையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் 20 அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தப்பட்டன. இதில் அதிமுக இணைவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை அமைச்சர் ஜெயகுமார் மறுத்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ஜெயகுமார் தெரிவிக்கையில், அதிமுக இணைவது குறித்து 123 எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவில் இருந்து சசிகலா விலகியதாக கூறியது தவறான தகவல் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Is Sasikala going to resign ADMK General Secretary's post? Minister Jayakumar refuses this.
Please Wait while comments are loading...