For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அந்த நாள் ஞாபகம்... பொங்கல் விழாவில் இணைந்த சசிகலா – நடராஜன்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருக்கும் தம்பதியர் இணைந்தால் எப்படி இருக்கும் அப்படி ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நடந்துள்ளது தஞ்சாவூரில். நிஜத்தில் பிரிந்திருக்கும் சசிகலா - நடராஜன் தம்பதியரை நிழலில் இணைத்து வைத்து பழைய நினைவுகளை கிளறிவிட்டனராம் அவரது ஆதரவாளர்கள்.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியரின் வாரிசுகள் சுந்தரவதனன்,விநோதகன், ஜெயராமன்,வனிதாமணி, சசிகலா, திவாகரன்.

Sasikala and Natarajan united for Pongal festival

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சசிகலாவிற்கும் தஞ்சாவூரை அடுத்த விளார் கிராமத்தைச் நடராஜனுக்கும் கருணாநிதி முதல்முறையாக முதல்வரான போது அவரது தலைமையில் திருமணம் நடைபெற்றது. நடராஜனுக்கு ஏ.பி.ஆர்.ஓ வேலை போட்டுக்கொடுத்ததும் கருணாநிதிதான்.

சூட்டோடு சூட்டாக சென்னையில் வாழ்க்கையை தொடங்கிய நடராஜன் - சசிகலா தம்பதியர் வினோத் வீடியோ விசனை தொடங்கினர். வீடியோ கடை நிர்வாகம் சசிகலா கையில் வந்தது.

ஜெயலலிதா அரசியல்

எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்னர் 1982ல் ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வீடியோ எடுத்துக் கொடுத்த வினோத் வீடியோ விசன் மூலம் வேதா நிலையத்திற்குள் அடி எடுத்து வைத்தார் சசிகலா.

வேதா நிலையத்தில்

அதுமுதல் சசிகலாவின் ஜாதகத்தில் சுக்கிரன் எட்டிப்பார்க்கவே ஜெயலலிதா உடன் நட்பு ஏற்பட்டது. சாதாரணமாக வேதா நிலையத்திற்குள் போன சசிகலா நிரந்தரமாகவே வேதா நிலையத்தில் தங்கிவிட்டார்.

பாதுகாப்பு அரண்

1984ல் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகம் முழுவதும் ஜெயலலிதா உடன் பிரசாரத்தில் வலம் வந்தார். ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக தனது தம்பி திவாகரனையும் உடன் அழைத்து வைத்தார்.

நடராஜன் பிரிவு

ஜெயலலிதாவிற்கு அனைத்து அரசியல் ஆலோசனைகளையும் தருவது நான்தான் என்று நடராஜன் எங்கோ, எப்போதோ சொன்னதாக தகவல் எட்ட அதுமுதல் நடராஜன் - ஜெயலலிதா இடையே பிரச்சினை வெடிக்கிறது.

நட்புக்கு மரியாதை

கணவரா, தோழியா என்ற கேள்வியில் தோழிதான் என்று முடிவெடுக்கிறார் சசிகலா. அதுமுதல் கணவன் மனைவி உறவை விட நட்புதான் முக்கியம் என்பதை நிரூபித்து வருகிறார் சசிகலா.

நட்பின் மூலம் அண்ணன், தம்பிகள், அக்காள் மகன்கள் என அனைவருக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்தார் சசிகலா.

நட்பில் விரிசல்

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலான சசி - ஜெயலலிதா நட்பில் சில ஆண்டுகளுக்கு முன் விரிசல் ஏற்பட்டது. போயஸ்கார்டனில் இருந்து வெளியேறினார். அப்போதே சசிகலா தனது கணவருடன் இணையப் போகிறார் என்ற பேச்சு அடிபட்டது. கணவர், தம்பிகள், உறவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது கூட எந்தவித கருத்தும் கூறாமல் மவுனம் சாதித்த சசிகலா மீண்டும் வேதாநிலையத்திற்குள் நுழைந்தார்.

சிறை தண்டனை

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உடன் இணைந்து நான்கு ஆண்டுகால சிறை தண்டனையை பெற்றுள்ளார். இது இப்படியிருக்க பிரிந்திருக்கும் சசிகலாவையும், நடராஜனையும் இணைத்து வைத்துள்ளனர் நடராஜன் ஆதரவாளர்கள்.

பொங்கல் விழா

தஞ்சாவூரில் ஆண்டுதோறும் நடராஜன் நடத்தும் பொங்கல் விழா அரசியல் வட்டாரத்தில் பிரபலம். 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கலை நிகழ்சிகள், பட்டி மன்றம்,கவியரங்கம் என தூள் பறக்கும். நடிகர், நடிகையர்களை எல்லாம் அழைத்துப் போய் அசத்துவார். இந்த ஆண்டு பொங்கல் விழாவில் அவரது ஆதரவாளர்கள் சசிகலாவும் அவர் கணவர் நடராஜனும் இருப்பது போல் `ஷீல்டு` கொடுத்தது அரசியல் பிரமுகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எட்டிப்பார்க்காத சசி

கடந்த சில ஆண்டுகளாகவே சொந்த பந்தங்களின் வீட்டு விசேசங்களுக்கு கூட எட்டிப்பார்க்காமல் இருக்கிறார் சசிகலா. எல்லாம் அக்கா மீதான பாசம்தான். நடராஜன் அண்ணன் மகன் திருமணம் நடந்தது. அதற்கு எப்படியாவது சசிகலாவை வர வைக்க வேண்டும் என்று அவர் உறவுகள் பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால் அதற்கும் சசிகலா வரவில்லை சில மாதங்களுக்கு முன்பு மன்னார்குடியில் நடந்த திவாகரன் மகள் அம்மு திருமணதிற்குக் கூட வராமல் தன் பங்கு விசுவாசத்தை காட்டினார்.

கவனம் ஈர்த்த விழா

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களுரு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்குப் பிறகு மீண்டும் வழக்கு நடந்து கொண்டு இருக்கும் நிலையில் தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நடராஜன் தம்பதியர்

நடராஜன் தலைமை உரையாற்றுவதற்கு முன்பு மேடை ஏறிய அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் "நடராஜன் தம்பதியர் நீடூழி வாழ்ந்து தமிழ்நாட்டிற்கு தொண்டு செய்ய இறைவனை வேண்டுகிறோம்" என்ற வாசகம் அடங்கிய ஷீல்டை கொடுத்தனர்.

அந்தநாள் ஞாபகம்

ஷீல்டை பெற்றுக் கொண்ட நடராஜன், சில மணித் துளிகள் அதைப் பார்த்து கனத்த மவுனத்தில் ஆழ்ந்தார். "சசிகலாவும் நடராஜனும் புன்முறுவல் பூத்தபடி" இணைந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்த படியே பேச்சை தொடங்கினாராம். அவரின் இது பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியது என்கின்றனர் விழாவிற்கு சென்றவர்கள்.

இணை பிரியா தோழியுடன் இருக்கும் சசிகலா, தன் கணவர் நடராஜனுடன் இணைய வேண்டும் என்பதே எங்களோட விருப்பம்" என்கின்றனர் நடராஜனின் ஆதரவாளர்கள். அது சசிகலாவின் கையில்தானே இருக்கிறது என்பது நடராஜனுக்கு தெரியாதா என்ன?

English summary
Sasikala and her husband Natarajan reunited after 25 long years of separation at Tanjore pongal festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X