For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோலைவனத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் வேண்டாம்… சீமான் ஆவேசம்

நெடுவாசல் என்ற சோலைவனத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீமான் கோரியுள்ளார். நெடுவாசல் கிராமத்தினர் நடத்தும் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவளித்த போது சீமான

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: கடந்த 11 நாட்களாக நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு நேரில் வந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது:

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றாமல் போனது இந்த தமிழக அரசு. எண்ணூர் கடலில் எண்ணெய் கொட்டியது. அதனை முறையாக எடுக்க முடியாமல் வாளியில் அள்ளிக் கொட்டியது அரசு. நெடுவாசலில் ஒரு பிரச்சனை என்றால் இந்த அரசு எப்படி சமாளிக்கும். அந்த அச்சம் எங்களுக்கு இருக்கிறது.

Seeman extends support to Neduvasal villagers

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனை எடுப்பதன் மூலம் சோலைவனமான இந்த பூமி பாலைவனமாக மாறிவிடும். அரபு நாடுகளில் எண்ணெய் எடுக்கிறார்கள் என்றால் அது ஏற்கனவே பாலைவனமாக இருக்கிறது. ஆனால் இங்கு அப்படி இல்லை. அதனால் அதனை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க முடியாது. இதுதான் வளர்ச்சி என்றால் அப்படி ஒரு வளர்ச்சி எங்களுக்கு வேண்டாம்.

மக்களின் போராட்டத்திற்கும் உணர்விற்கும் மதிப்பளித்து உடனடியாக இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழகம் முழுவதற்குமான பிரச்சனையாக இது உருவெடுத்துள்ளது. விவசாயத்தை அழித்துவிட்டு எண்ணெய்யை எடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று கூறினார் சீமான்.

English summary
Naam Thamilar leader Seeman extended his support to Neduvasal villagers in Pudukottai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X