ஆளப்போறான் தமிழன் பாட்டைக் கேட்டால் சிலருக்கு என் முகம் தான் ஞாபகம் வரும்... சீமான் பரபர பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மெர்சல் திரைப்படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் பாடலைக் கேட்டாலே சிலருக்கு என் முகம் தான் ஞாபகத்திற்கு வரும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வள்ளியூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசியுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கூடங்குளம் அணுஉலை மட்டுமல்ல தமிழகத்தில் எங்குமே அணுஉலை கூடாது என்று தான் தமிழ் ஆர்வலர்கள் போராடி வருவதாத் தெரிவித்தார். கூடங்குளம் அணுஉலை கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கவில்லை என்றும் மக்கள் நலனைப் பற்றி அக்கறைப்படாத அரசுகளே தமிழகத்தை ஆள்வதாகவும் சீமான் பேசினார்.

 சுவாரஸ்ய பேச்சு

சுவாரஸ்ய பேச்சு

அண்மையில் பெரும் சர்ச்சைக்குள்ளான மெர்சல் திரைப்படத்திற்கு பெரிய அளவில் ஆதரவு கொடுத்தார் சீமான். கர்நாடகாவில் மெர்சல் படத்தை வைத்து இனப்பிரச்னையை தூண்டுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது வள்ளியூர் கண்டனப் பொதுக்கூட்டத்தில் மெர்சல் திரைப்படப் பாடலை சுட்டிக்காட்டி சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.

8 ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்

எட்டு ஆண்டுகளாக நான் இதைத் தான் சொல்லி வருகிறேன் தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும். ஆனால் தமிழர்களுக்கு தரையில் சொல்வதை விட திரையில் சொன்னால் தான் புரியும். ஆளப்போறான் தமிழன்னு பாட்டு வந்ததுமே கொண்டாடுறாங்க.

 எல்லோருமே சொல்றாங்களே

எல்லோருமே சொல்றாங்களே

தமிழன் தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்று நான் சொன்ன போது எல்லோரும் கேலி செய்தார்கள். ஆனால் இந்தப் பாடல் வந்த பிறகு எல்லோரும் தமிழன் தான் ஆளப்போறான் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். தமிழர்களின் தேவைகளை திரைப்படங்கள் தான் முடிவு செய்கின்றன.

 எங்களிடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள்

எங்களிடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள்

மெர்சல் திரைப்படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலைக் கேட்டாலே எதிர்த்தவர்களுக்கு என்னுடைய முகம் தான் நியாபத்திற்கு வரும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு எங்களிடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள் மக்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்து காட்டுகிறோம் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Naam thamizhar party organiser Seeman says that those who jibes me when i say Tamilan only rule the state now they will realise my face while hearing the song of Alapporan Tamizhan from Mersal movie.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற