தமிழகத்தில் பழனிச்சாமி ஆட்சி நடந்ததே சாதனைதான்: இதிலென்ன ஓராண்டு நிறைவு சாதனை? - சீமான் பொளேர்

தூத்துக்குடி: தமிழகத்தில் பழனிச்சாமி ஆட்சி நடந்ததே சாதனைதான். இதிலென்ன ஓராண்டு நிறைவுக்கான சாதனை வேண்டியிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து ஆங்காங்கே விழாக்கள் நடைபெற்று வருகின்றன. முதல்வர், துணை முதல்வரும் நேற்று ஒரு விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் ஓராண்டு நிறைவடைந்ததற்கு பக்கபலமாக இருந்த எம்எல்ஏக்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார். இதுகுறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் பழனிச்சாமி ஆட்சி நடந்ததே சாதனைதான். இதில் ஓராண்டு நிறைவுக்கான சாதனை வேறு ஏன்.
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் வராது. காவிரி மேலாண்மை வாரியத்தை ஆளும் பாஜகவும் அமைக்காது; காங்கிரசும் அமைக்காது என்று சீமான் பேசினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!