கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி என பாரதிராஜா கூறியதில் பிழையில்லையே- சீமான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி என பாரதிராஜா கூறியதில் பிழையேதும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அண்ணா சாலை புரட்சியின் போது சீருடையில் இருந்த காவலரை ஒரு கும்பல் தாக்கியது வன்முறையின் உச்சம் என்று ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து பன்னாட்டுத் திரைப்பட பயிற்சிப் பட்டறை சார்பில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழன் அல்லாத ரஜினி கர்நாடக தூதுவர் என்பது இப்போதுதான் தெரிகிறது.

Seeman says that Bharathirajas comment on Rajini is nothing wrong

இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது. உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது. தமிழன் உறிஞ்சிய ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள் என்று கடுமையான வார்த்தைகளால் பாரதிராஜா குறிப்பிட்டிருந்தார்..

இதுகுறித்து சீமான் கூறுகையில் கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி என பாரதிராஜா கூறியதில் தவறில்லை. நடிக்கும் போது பிரச்சினை இல்லை, ஆள நினைக்கும்போது தான் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழினம் மீண்டும் அடிமைப்பட்டு கிடக்க முடியாது. காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் சீமான்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Seeman says that Bharathiraja's comment on Rajini is nothing wrong. Tamil race should not be slavery for again.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற