சிவாஜி கணேசனுக்கு மக்கள் கூடும் இடத்தில் சிலை வைக்க நடிகர் சங்கம் கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அகற்றப்பட்ட சிவாஜியின் சிலையை காமராஜர் சிலை அருகிலோ அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ நிறுவ வேண்டும் என்று நடிகர் சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை சென்னை மெரினா காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

South Indian artist association passed a resolution about Sivaji's statue

உயர்நீதிமன்றமும் சிலையை வேறு இடத்தில் மாற்ற உத்தரவிட்டு தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க கால அவகாசம் அளித்திருந்தது. இந்நிலையில் அவரது சிலை கடந்த புதன்கிழமை இரவு இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கு பெஃப்சி, இயக்குநர் சங்கம் ஆகியன கடும் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் சிலை அகற்றம் குறித்து செயற்குழுவை கூட்டிய நடிகர் சங்கம் அதில் முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளது. அதாவது சிவாஜி கணேசனின் சிலையை காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ வைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்த தீர்மானத்தை நிறைவேற்றியது.

சிலை அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக அமைப்புகள், பெஃப்சி, இயக்குநர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
South Indian Artists Association has passed a resolution in their executive committee to install Sivaji's statue near Kamarajar statue or public gathering places.
Please Wait while comments are loading...