ஆண்டாள் விவகாரம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் நாளை முதல் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்: கவிஞர் வைரமுத்து ஆண்டாளை அவதூறாக விமர்சனம் செய்ததாக கூறி அவர் மன்னிப்பு கேட்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைரமுத்து, ஆண்டாள் நாச்சியார் குறித்து பாராட்டத்தக்க கருத்துகளை பேசி வந்தார். அப்போது வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் அவரது நூலில் ஆண்டாள் குறித்து கூறியுள்ளதை வைரமுத்து மேற்கோள்காட்டினார்.

Sri Villiputhur Jeeyar protest from tomorrow

அந்த வார்த்தை ஆரம்ப காலத்தில் நல் அர்த்தத்தை கொடுப்பதாக இருந்த போதிலும் தற்போது அது தவறான அர்த்தத்ததை குறிக்கிறது. இதனால் வைரமுத்து ஆண்டாளை அவதூறாக பேசியதாக அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததன.

அவர் விளக்கம் கோரியும், வருத்தம் தெரிவித்தும் இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். ஏற்கெனவே வைரமுத்துவுக்கு கெடு விதித்து விட்டு உண்ணாவிரதத்தை கைவிட்ட நிலையில், ஜீயர் மறுபடியும் போராட்டத்தை தொடங்கி பிப்ரவரி 3-க்குள் வைரமுத்து ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

ஆனால் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை வைரமுத்து கோயிலுக்கு வரவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை. இதனால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக ஜீயர் அறிவித்தார்.

இந்நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
SriVilliputhur Sadagoba Ramanujar starts his protest from tomorrow demanding Vairamuthu to ask apology for Andal comment.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற