• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் காலில் விழ வேண்டாம்... அன்பான வாழ்த்து போதும்- ஸ்டாலின்

By Mayura Akilan
|

சென்னை: தமிழக அரசியலில் காலில் விழும் கலாச்சாரம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதிமுக, திமுகவில் தலைவர்கள் கால்களில் தொண்டர்கள் விழுவது சர்வ சாதாரணம். புத்தாண்டு தினத்தன்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறிய பலரும் வரிசையாக அவரது காலில் விழுந்து எழுந்தனர். செயல்தலைவரான பின்னர் அவரை சந்தித்து வாழ்த்து கூற வரும் பலரும் காலில் விழுகின்றனர்.

இந்த நிலையில் "அன்பின் அடையாளம் போதும். அடிமை நிலை வேண்டாம்" என்ற தலைப்பில் திமுகவினருக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுகவின் செயல்தலைவரான பின்னர், தனது தந்தை பாணியில் உடன்பிறப்பே கடிதம் போல தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் இன்று எழுதியுள்ள தனது கடிதத்தில், உங்களில் ஒருவன் எழுதும் அன்பு மடல் என்று தொடங்கியுள்ளார். தலைவர் கருணாநிதியின் வாழ்த்துகளுடன் பேராசிரியர் அவர்களின் முன்னிலையில் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் உங்களின் பேராதரவுடனும் நல்லெண்ணத்துடனும் கழகத்தின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன்.

கடமைகள்

கடமைகள்

நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. காரியமாற்ற விரைந்து வா என அவை ஒவ்வொரு நிமிடமும் அழைக்கின்றன. எனினும், உங்களைப் போன்றவர்களின் உள்ளன்பும், அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு பல கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அறிஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், ஊடகத்தினர் எனப் பலரின் நேசமும் பேரன்பும் நேரிலும் அலைபேசியிலும் வாழ்த்து மழைகளாகப் பொழிகின்றன. பணிச் சுமைகளுக்கிடையில் உங்களின் அன்புமழையில் நனைவது மனதுக்கு இதமளித்து, சுமையைச் சுகமாக்குகிறது.

காலில் விழ வேண்டாம்

காலில் விழ வேண்டாம்

நேரில் சந்திக்க வரும் தொண்டர்கள் சிலர் ஆர்வம் மிகுதியால், நான் சற்றும் எதிர்பாராத நிலையில் என் காலில் விழுந்து வணங்க முயற்சிப்பது எனக்கு மனதளவில் பெரும் நெருக்கடியை உண்டாக்குகிறது. தொண்டர்கள் இப்படிக் காலில் விழுவதை நான் சிறிதும் விரும்புவதில்லை. விழ முயற்சிக்கும் தோழர்களை உடனடியாகத் தடுத்து தூக்குவதுடன், சில வேளைகளில் பாசத்தோடு கடிந்து கொள்வதும் உண்டு.

சுயமரியாதை

சுயமரியாதை

எனினும், நாள்தோறும் நேரில் வாழ்த்து தெரிவிக்கும் கழகத்தினரில் சிலர், என் காலில் விழ முயற்சிப்பதும் அதனைப் பார்க்கும் மற்றவர்களும் அதே முறையைக் கடைப்பிடிக்க நினைப்பதும் எனக்கு சற்றும் உடன்பாடில்லாத செயல் என்பதுடன், சுயமரியாதைக் கொள்கை வழியில் தன்மானம் காக்கும் இந்த இயக்கத்திற்கும் எதிர்மறைச் செயலாகவும், உடன்பாடில்லாத செயலாகவும் அமைந்து விடுகிறது.

திமுக இயக்கம்

திமுக இயக்கம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதால், மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என சமத்துவ நிலைகாண உரிமைப் போராட்டம் நடத்திய திராவிட இயக்கத்தின் அரசியல் அமைப்பாக நம்முடைய கழகம் செயல்பட்டு வருகிறது. யார் காலிலும் விழ வேண்டிய அடிமை நிலை எந்த மனிதருக்கும் எப்போதும் ஏற்படக் கூடாது என்பதை வலியறுத்தி, வெற்றி கண்ட இயக்கம் இது.

கனிவான வேண்டுகோள்

கனிவான வேண்டுகோள்

ஒரு மனிதனை சக மனிதன் இழுத்துச் செல்லும் கை ரிக்ஷாக்களை ஒழித்து, சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கி சமூகப் புரட்சியை உருவாக்கியவர் நம் தலைவர் கருணாநிதி. அவரது மகனாக மட்டுமல்ல, அவர் தலைமையிலான தொண்டனாகவும், உங்களில் ஒருவனாகவும் பழகி வரும் என் காலில் விழுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆணையிடுவதாகக் கருத வேண்டாம். மொழி-இனப் பெருமைகளை மறவாமல், சமூகநீதியை நிலைநாட்டி சுயமரியாதைக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்கான என் கனிவானக் வேண்டுகோள் இது.

தமிழகத்தின் மாண்பு

தமிழகத்தின் மாண்பு

காலந்தோறும் ஏற்படும் சவால்களுக்கு ஏற்ப சுயமரியாதைக் கொள்கையைக் காத்து, சமூக நீதியை நிலைநாட்டி, தமிழினத்தின் மாண்பு காக்க பாடுபட வேண்டிய நெடிய பயணம் நமக்கு இருக்கிறது. அந்தப் பயணத்திற்குத்தான் நமது கால்கள் பயன்படவேண்டும். அந்தப் பயணத்திற்கு ஏற்ற வகையில் வலுவான உடல் இருக்க வேண்டும். முதுகு வளையக் குனிவதோ-காலில் விழுவதோ நம் இலட்சியப் பயணத்தைப் பாழ்படுத்திவிடும்.

வாழ்த்து போதும்

வாழ்த்து போதும்

மனிதருக்கு மனிதர் தன்மானம் தாழாமல் மரியாதை செலுத்துவதற்காகத் தான் வணக்கம் எனும் அழகுத் தமிழ்ச் சொல்லை நடைமுறைப்படுத்தியது திராவிட இயக்கம். அதன்படி, புன்னகையுடன் நீங்கள் சொல்லும் வணக்கம் தான் மனம் நிறைந்த வாழ்த்துக்கான அடையாளம். கம்பீரமான அந்த வாழ்த்து போதும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தலை நிமிர்வோம்

தலை நிமிர்வோம்

வளைந்து குனிந்து தவழ்ந்து தரையில் உருண்டு கால்நோக்கி கும்பிடு போடுபவர்களால் தமிழகம் பாழ்பட்டுக் கிடக்கிறது. நமக்கு அந்தப் பள்ளமான பாதை வேண்டாம். நாம் தலை நிமிர்வோம். தமிழகத்தை நிமிர்த்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

English summary
The working president of the DMK, M K Stalin wrote letter to party members, your loveable blessing for me enough.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X