பொள்ளாச்சி ஜெயராமனின் கருத்துக்கு பதில் கூறி தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.. மு.க.ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொள்ளாச்சி ஜெயராமனின் கருத்துக்கு பதில் கூறி தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஸ்டாலினை சரமாரியாக சாடினார். அப்போது ஸ்டாலின் போராட்டங்களை தூண்டிவிட்டு ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Stalin refused to answer Pollachi Jayaraman accusation

மேலும் நேற்றைய நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்டாலின் தமிழக அரசு குறித்து பேசியதற்கும் கண்டனம் தெரிவித்த பொள்ளாச்சி ஜெயராமன், ஸ்டாலினுக்கு மனம் பேதலித்து விட்டதாக சாடினார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் துணை சபாநாயகர் கூறியது தொடர்பாக பதில் அளித்து தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Stalin refused to answer Pollachi Jayaraman accusation. Stalin said he dont want to loose his respect by answering Pollachi Jayaraman.
Please Wait while comments are loading...