For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் டிசிஎஸ் நிறுவன பேருந்தை கவிழ்த்த பேய்க்காற்று: வீடியோ #CycloneVardah

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வர்தா புயல் கரையை கடந்தபோது வீசிய பேய்க்காற்றில் சிக்கி டிசிஎஸ் நிறுவன பேருந்து ஒன்று கவிழ்ந்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் சென்னை அருகே திங்கட்கிழமை கரையை கடந்தது. இதனால் சென்னையில் நேற்று கனமழை பெய்தது. மேலும் சென்னை வரலாற்றிலேயே முதல்முறையாக நேற்று மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

Strong winds overturn a bus in Chennai

சென்னையில் வீசிய பேய்க்காற்றால் 6 ஆயிரம் மரங்கள் விழுந்தன, 4 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்நிலையில் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை ஒன் ஐடி பார்க்கில் இருக்கும் டிசிஎஸ் நிறுவன பேருந்து ஒன்று பேய்க்காற்றில் சிக்கி கவிழ்ந்துள்ளது.

பேருந்தை காற்று கவிழ்த்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து கவிழ்ந்ததை நேரில் பார்த்தவர்கள் கடவுளே என்று அலறும் சப்தம் வீடியோவில் கேட்கிறது.

பேருந்து தவிர்த்து காரையும் பேய்க்காற்று பந்தாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Strong winds overturn a TCS bus in Chennai when cyclone Vardah made lanfall on monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X