சிங்காரம் கொலை வழக்கில் சரணடைந்த சுபாஷ் பண்ணையாருக்கு ஜாமீன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
25 ஆண்டுகளாக விடாமல் விரட்டும்.. பழிக்குப் பழி கொலைகள்!-வீடியோ

திருநெல்வேலி: சிங்காரம் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த சுபாஷ் பண்ணையார் திருநெல்வேலி நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் துணையுடன் சரணடைந்தார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சிங்காரம் என்பவரை பிப்ரவரியில் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர் சுபாஷ். சுபாஷ் பண்ணையாரை கடந்த வாரம் அறிவித்தது போலீஸ். இதனையடுத்து அவர் சரணடைந்தார்.

Subash Pannaiyar surrender in Tirunelvely court

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள புல்லாவெளியை சேர்ந்தவர் சிங்காரம். அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர்.

இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

பாளையங்கோட்டை கேடிசி நகர் நான்கு வழி சாலையில் வந்த போது காரில் வந்த கும்பல் போலீஸ் வேனை மறித்து சிங்காரத்தை வெட்டி கொன்று விட்டு தப்பி ஓடியது.

இந்த கொலை வழக்கில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்வின் ராபர்ட், அனிஸ் குமார் உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சுபாஷ் பண்ணையார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பிரகனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக இருந்து வருகிறார்.

ஏற்கெனவே இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் என்றும், அவர்களது பெயர் பாதுகாக்கப்படும் என்றும் புதிய விசாரணை அதிகாரி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த பல மாதங்களாக தலைமறைவாக இருந்த சுபாஷ் பண்ணையார் தனது வழக்கறிஞர் துணையுடன் திருநெல்வேலி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

இதனிடையே கடந்த பல மாதங்களாக தலைமறைவாக இருந்த சுபாஷ் பண்ணையார் தனது வழக்கறிஞர் துணையுடன் திருநெல்வேலி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Venkatesa Pannaiyar’s brother Subash Pannaiyar has surrender in Tirunelvely court today, in connection with Singaram murder case.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற