கணினி அறிவியல் வேலையில்லா பட்டாதாரி ஆசிரியர்கள் - ஈரோடு நகரில் முதல் மாநாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர்கள் முதல் மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது- வீடியோ

  சென்னை: தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டாதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், ஜனவரி 7ம் தேதி ஈரோட்டில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

  கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சி.பி.எஸ்.சி., மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக மட்டும் அல்லாமல் அதை விட மேலான கல்வியை அரசுப்பள்ளியில் கொண்டுவந்து அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்திடவும். கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக இணைக்கவும். கணினி ஆசிரியர்கள் சார்பில் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  2018 ஜனவரி 7ஆம் தேதியன்று ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள மல்லிகை அரங்கத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு மல்லிகை அரங்கில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  ஈரோட்டில் மாநாடு

  ஈரோட்டில் மாநாடு

  கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக இணைக்கவும். கணினி ஆசிரியர்கள் சார்பில் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்த மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற உள்ளார்.

  பள்ளிகளில் கணினி பாடம்

  பள்ளிகளில் கணினி பாடம்

  மாநிலம் முழுவதும் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் கணினி அறிவியல் பாடத்திற்கு 2500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முதற்கட்டமாக அரசுப்பள்ளிகளில் 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்தார். ஆனால் அதன் பிறகு இப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்

  பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்

  இதன் காரணமாக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. எனவே இப்பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வரைவுப்பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி., வரையிலும் தனிப்பாடமாக கொண்டு வர வேண்டும்.

  கணினி ஆய்வகங்கள்

  கணினி ஆய்வகங்கள்

  இதன் மூலம் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, தலா ஒரு கணினி ஆசிரியரை நியமனம் செய்யவும், அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஆய்வகங்கள் அமைக்க வேண்டும் என்பதும் எங்களது நீண்டகால கோரிக்கை. இவற்றை வலியுறுத்தி வரும் 7ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அறிவிப்போம்.

  ஈரோடு மாநாடு

  ஈரோடு மாநாடு

  மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளை பங்கேற்க செய்வது என்றும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பது குறித்தும் மாநாட்டில் முடிவு செய்யப்படும். இவ்வாறு மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  Tamil Nadu Computer Science B.Ed Graduate Teachers held first conference on 7th January, 2018 in Erode. The Tamil Nadu Computer Science B.Ed Graduate Teachers Welfare Society urged the Department of School Education to take steps to fill up the vacancies of computer science teachers in government higher secondary schools that were upgraded during the period 2006 – 2011.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற