அடுத்த வருஷம் இந்த நாளெல்லாம் லீவு, லீவு, லீவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2015ஆம் ஆண்டு தை திருநாள் ஜனவரி 15ம் தேதி வருகிறது. வழக்கமாக ஜனவரி 14ஆம் தேதிதான் தை திருநாள் வருவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 15 வியாழக்கிழமையன்று தை திருநாள் கொண்டாடப்படுகிறது. எனவே அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

2015ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ளார். அவரது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

Tamil Nadu govt employees to get additional three holidays in 2015

ஜனவரி 1- ஆங்கிலப்புத்தாண்டு (வியாழக்கிழமை)

ஜனவரி 4- மிலாதுநபி (ஞாயிற்றுக்கிழமை)

ஜனவரி 15- பொங்கல் (வியாழக்கிழமை)

ஜனவரி 16- திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை)

ஜனவரி 17- உழவர் திருநாள் (சனிக்கிழமை)

ஜனவரி 26- குடியரசு தினம் (திங்கட்கிழமை)

மார்ச் 21- தெலுங்கு ஆண்டு பிறப்பு (சனிக்கிழமை)

ஏப்ரல் 1- வங்கிகள் கணக்கு முடிப்பு (வணிக-கூட்டுறவு வங்கிகள்) (புதன்கிழமை

ஏப்ரல் 2- மகாவீரர் ஜெயந்தி (வியாழக்கிழமை)

ஏப்ரல் 3- புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை)

ஏப்ரல் 14- தமிழ்ப்புத்தாண்டு-அம்பேத்கர் பிறந்தநாள் (செவ்வாய்க்கிழமை)

மே 1- மே தினம் (வெள்ளிக்கிழமை)

ஜூலை 18- ரம்ஜான் (சனிக்கிழமை)

ஆகஸ்டு 15- சுதந்திர தினம் (சனிக்கிழமை)

செப்டம்பர் 5- கிருஷ்ண ஜெயந்தி (சனிக்கிழமை)

செப்டம்பர் 17- விநாயகர் சதுர்த்தி (வியாழக்கிழமை)

செப்டம்பர் 24- பக்ரீத் பண்டிகை (வியாழக்கிழமை)

அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி (வெள்ளிக்கிழமை)

அக்டோபர் 21- ஆயுத பூஜை (புதன்கிழமை)

அக்டோபர் 22- விஜயதசமி (வியாழக்கிழமை)

அக்டோபர் 23- முகரம் (வெள்ளிக்கிழமை)

நவம்பர் 10- தீபாவளி (செவ்வாய்க்கிழமை)

டிசம்பர் 23- மிலாதுநபி (புதன்கிழமை)

டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் (வெள்ளிக்கிழமை)

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு ரொம்ப நல்ல ஆண்டு என்று கூறப்படுகிறது. வாரவிடுமுறையை ஒட்டி பண்டிகை தினங்கள் வருவதால் தொடர் விடுமுறை நிறைய கிடைக்கிறது.

ஏப்ரல் 2 மகாவீர் ஜெயந்தி வியாழக்கிழமையும், ஏப்ரல் 3 புனிதவெள்ளி வெள்ளிக்கிழமையும் வருவதால் தொடர்ந்து சனி ஞாயிறு விடுமுறை வருகிறது.

அதேபோல மே1ம் தேதியும், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி வெள்ளிக்கிழமை வருகிறது. தொடர்ந்து அக்டோபர் 21ல் தொடங்கி அக்டோபர் 23 வரை ஆயுதபூஜை, விஜயதசமி முகரம் பண்டிகை விடுமுறைகள் வார நாட்களான புதன், வியாழன், வெள்ளி வருகிறது, சனி, ஞாயிறு என அந்த வாரம் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.

அதேபோல டிசம்பர் 25 கிருஸ்துமஸ் தினம் வெள்ளிக்கிழமை வருவதால் அந்த வாரமும் மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+