For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு துறைகளில் நடக்கும் ஊழல்கள்.. லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு!

அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ.அன்பழகனால் சட்டசபையில் அல்லல்படும் சபாநாயகர்- வீடியோ

    சென்னை: அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நாடு முழுவதும், அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க 2013 ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது.

    Tamil Nadu govt plans implement Lok Aayuktha bill in this assembly session

    இது, 2014 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் நடை முறைக்கு வந்தது. லோக் ஆயுக்தா அமைப்புகள், 15 மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள், லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றவில்லை. லோக் ஆயுக்தா அமைப்புகளை அமைக்கும் பணியை, தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இதுதொடர்பானஅறிக்கையை, ஜூலை, 10ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், 'லோக் ஆயுக்தா' தொடர்பான சட்ட மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    English summary
    Tamil Nadu govt plans implement Lok Aayuktha bill in this assembly session sources said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X